Kidney: 'சிறுநீரகப் பிரச்னையா?'- நீங்கள் உணவில் சேர்க்க வேண்டிய 5 உணவுகள்
சிறுநீரக நோயை உணவு மற்றும் பிற வாழ்க்கை முறை மாற்றங்களுடன் நன்கு நிர்வகிக்க முடியும். சிறுதானியங்கள் முதல் பாசிப்பயறு வரை, நீங்கள் உட்கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
சிறுநீரக நோயைக் கண்டறிவதைப் பற்றி மக்களுக்கு ஒரு வித அச்ச உணர்வு இருக்கிறது. மேலும் காலப்போக்கில் நோய் மோசமடைவதாகப் பலர் அஞ்சுகிறார்கள். இருப்பினும், நாள்பட்ட சிறுநீரக நோயை நன்கு நிர்வகிக்க முடியும். குறிப்பாக ஆரம்ப கட்டங்களில் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் பெரும்பாலும் அதிசயத்தை ஏற்படுத்தும்.
உங்கள் சிறுநீரகங்களை கவனித்துக்கொள்வதும், சரியான உணவை உட்கொள்வதும் இதயப் பிரச்னைகள், எலும்பு நோய் மற்றும் ரத்த சோகை போன்ற பிற உடல்நலப் பிரச்னைகளைத் தவிர்க்கவும் உதவும். நோய் மேலாண்மை என்று வரும்போது, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சரியான நேரத்தில் மருந்துகளைத் தவிர உணவு மாற்றங்களைக் கையாள்வதும் முக்கிய ஒன்றாகக் கருதப்படுகிறது.
உட்கார்ந்து பணிசெய்யும் வாழ்க்கை முறை, உடல் பருமன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் சிறுநீரக நோய் ஏற்படலாம். குமட்டல், வாந்தி, பசியின்மை, சோர்வு, மனக் கூர்மை குறைதல் போன்ற அறிகுறிகள் இதன் அறிகுறிகளாகும்.
சிறுநீரக நோயை ஆரம்ப கட்டங்களில் கண்டறிவது கடினம். ஆனால், மேம்பட்ட கட்டங்களில், ஆபத்தான அளவு திரவம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கழிவுகள் உடலில் உருவாகின்றன.
தைராய்டு மற்றும் சிறுநீரக நோய்களை நிர்வகிப்பது என்பது ஒருவரின் உணவை கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்னும் பழக்கத்தையும் கொண்டு வந்துவிடுகிறது.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். பழங்கள் மற்றும் காய்கறிகள், மீன், முட்டை, குறைந்த அளவிலான கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். உணவில் பொட்டாசியம் அல்லது பாஸ்பேட்டின் அளவினைக் குறைத்துக் கொள்ளலாம்.
வெளியில் உணவகங்களில் உண்ணும் உணவகங்களை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை விரும்ப வேண்டும். நாட்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கான உணவுகள்
டெல்லியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை டாக்டர் சஞ்சீவ் குலாட்டி சிறுநீரக நோய்களை நிர்வகிக்க உதவும் ஐந்து உணவுகளைப் பற்றி கூறியுள்ளதாவது:-
1. மஞ்சள்: அழற்சி எதிர்ப்புப் பண்புகளுக்கு பெயர் பெற்ற மஞ்சள், தைராய்டு மற்றும் சிறுநீரக ஆரோக்கியம் இரண்டையும் பாதுகாக்கிறது. இதில் குர்குமின் உள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற விளைவுகளைக் கொண்டுள்ளது. சிறுநீரக நோயுடன் தொடர்புடைய வீக்கத்தை மஞ்சள் குறைக்க உதவுகிறது.
2.தயிர்: இந்திய உணவு வகைகளில் பிரதானமான தயிர், அயோடினின் நல்ல மூலமாகும். இது தைராய்டு செயல்பாட்டிற்கு அவசியம் ஆகும். சிறுநீரகத்திற்கு ஏற்ற கொழுப்பு தயிரில் உள்ளது.
3. கீரைகள்: வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பிய, கீரைகள் தைராய்டு மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு முக்கியப் பங்காற்றுகின்றன. அதில் பொட்டாசியம் குறைவாக இருப்பதால், அவை சிறுநீரகத்திற்கு நட்பாக இருக்கின்றன. மேலும் அவற்றில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால், சிறுநீரகத்தில் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
4. பாசிப்பயிறு: புரதத்தின் வளமான ஆதாரமாக பாசிப் பயிறு இருக்கிறது. இதில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளது. இது சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது. இதனை அவித்தோ அல்லது சூப் செய்தோ குடிக்கலாம்.
5. தினை: இந்த பாரம்பரியமிக்க சிறுதானியங்களான கம்பு, சாமை போன்றவற்றைக் குறிக்கும். மற்ற சில தானியங்களுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்கள் உடலில் எளிதாக ஜூரணம் ஆகக் கூடியவை. இவற்றை தினை ரொட்டி வடிவில் சேர்க்கலாம். பல்வேறு உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். இது சிறுநீரகத்துக்கு ஏற்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்