Kidney Stone Symptoms: இந்த அறிகுறிகளில் ஏதாவது உங்களுக்கு உள்ளதா? கிட்னியில் கல் இருக்கலாம்! இத ஃபாலோ பண்ணுங்க!
”சிறுநீரகக் கற்களைத் தடுப்பதற்கும் அவற்றின் சிகிச்சைக்கு உதவவும் போதுமான அளவில் தண்ணீரை எடுத்துக் கொள்வது முக்கியம். அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரில் உள்ள பொருட்களை நீர்த்துப்போகச் செய்து கல் உருவாவதை தடுக்கிறது”
சர்க்கரை நோயை போலவே பலரும் சிறுநீரக கற்கள் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வயிற்று வலி அதிகமாகி மருத்துவரிடம் சென்று உடலை சோதித்த பிறகுதான் பலருக்கும் கிட்னியில் கற்கள் இருக்கும் பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது.
நமது சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள், சிறியதாக இருந்தாலும், உடலில் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி தாங்க முடியாத வலியை தருகிறது.
சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளை என்ன என்பதை பற்றி புரிந்துகொள்வதும் பொருத்தமான உணவைப் பின்பற்றுவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
சிறுநீரக கற்களின் அறிகுறிகள்:-
கடுமையான வலி
சிறுநீரகக் கற்களின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று முதுகு, பக்கம் அல்லது அடிவயிற்றில் ஏற்படும் வலி. இந்த வலி நாளடைவில் உடலின் இடுப்பு பகுதி அல்லது பிறப்புறுப்புகளுக்கு பரவும் தன்மை கொண்டது.
சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள்
சிறுநீரக கற்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுதல் சிறுநீரில் ரத்த கசிவு (ஹெமாட்டூரியா) உண்டாகுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாக உள்ளது.
குமட்டல் மற்றும் வாந்தி
சிறுநீரக கற்களுடன் தொடர்புடைய கடுமையான வலி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தியைத் தூண்டுகிறது.
காய்ச்சல்
சில சமயங்களில் சிறுநீரக கற்கள் காய்ச்சலை ஏற்படுத்தும், இது சிறுநீர் பாதையில் தொற்று அல்லது அடைப்பு ஏற்பட்டுள்ளதை குறிக்கிறது.
சிறுநீரக கற்களை குணப்படுத்த உதவும் உணவுகள்:
நீர் பருகுதல்
சிறுநீரகக் கற்களைத் தடுப்பதற்கும் அவற்றின் சிகிச்சைக்கு உதவவும் போதுமான அளவில் தண்ணீரை எடுத்துக் கொள்வது முக்கியம். அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரில் உள்ள பொருட்களை நீர்த்துப்போகச் செய்து கல் உருவாவதை தடுக்கிறது.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்கள் எனப்படும் ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழங்களில் சிட்ரேட் நிறைந்து காணப்படுகிறது. இவை சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயத்தை தடுக்கிறது.
கீரைகள்
கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க முடியும். இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது.
பெர்ரி ரக பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை வீக்கத்தைக் குறைக்கவும் சிறுநீரக கல் உருவாகும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
குறைந்த சோடியம் கொண்ட உணவுகள்
அதிக சோடியம் கொண்ட உணவுகளைஉட்கொள்வது உட்கொள்ளவது சிறுநீரகத்தில் கல் உண்டாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதற்கு மாற்றாக குறைந்த சோடியம் உள்ள மாற்று உணவுகளை உண்பது அவசியம், உப்பு குறைவான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கல் உருவாகும் அபாயத்தை குறைக்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கட்டாயம் தவிர்ப்பது நல்லது.
சிறுநீரகக் கற்களை கட்டுப்படுத்த அதிக தண்ணீர் குடிப்பது. சிட்ரஸ் பழங்களை சாப்பிடுதல், கீரைகளை உணவில் எடுத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட செயல்முறைகளை கட்டாயம் பின்பற்றுவது முக்கியம். நல்ல உணவுகள் நல்ல உடல்நிலையை பராமரிக்க பேருதவி செய்கின்றன. சிறுநீரக கற்கள் குறித்த பிரச்னைகளுக்கு முறையான தீர்வு காண மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
டாபிக்ஸ்