தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kerala Ghee Rice : கேரளா ஸ்பெஷல் நெய்ச்சோறு – பேரிட்சை ஊறுகாய் சேர்த்து சாப்பிட வேற லெவல் டேஸ்ட் தரும்!

Kerala Ghee Rice : கேரளா ஸ்பெஷல் நெய்ச்சோறு – பேரிட்சை ஊறுகாய் சேர்த்து சாப்பிட வேற லெவல் டேஸ்ட் தரும்!

Priyadarshini R HT Tamil
Aug 24, 2023 12:15 PM IST

Kerala Ghee Rice : இந்த நெய்ச்சோறை நீங்கள் பாஸ்மதி அல்லது ஜீரக சம்பா அரிசியை வைத்து செய்யலாம். இரண்டு அரிசியிலுமே இதை செய்யமுடியும்.

கேரளா நெய்ச்சோறு செய்வது எப்படி?
கேரளா நெய்ச்சோறு செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நெய்ச்சோறை நீங்கள் பாஸ்மதி அல்லது ஜீரக சம்பா அரிசியை வைத்து செய்யலாம். இரண்டு அரிசியிலுமே இதை செய்யமுடியும்.

நெய்ச்சோறு செய்ய தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி/ஜீரக சம்பா அரிசி – 2 கப் (அலசி கழுவியது)

பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)

இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

முழு கரம் மசாலா – (4 கிராம்பு, 2 ஏலக்காய், 1 பட்டை, 1 ஸ்டார் சோம்பு, 1 பிரியாணி இலை)

முந்திரி – 10-12

உலர் திராட்சை – ஒரு கைப்பிடியளவு (தேவையென்றால் பயன்படுத்திக்கொள்ளலாம்)

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லித்தழை – கைப்பிடி அளவு

நெய் – 5 டீஸ்பூன்

சூடு தண்ணீர் – மூன்றரை கப்

செய்முறை

அரிசியை நன்றாக கழுவி 20 முதல் 30 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும்.

ஒரு குக்கர் அல்லது அடிக்கனமான பாத்திரத்தில் 3 முதல் 4 ஸ்பூன் நெய்யை ஊற்ற வேண்டும்.

முதலில் முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நெய்யில் இருந்து எடுத்துவிடவேண்டும்.

இப்போது முழு கரம் மசாலாவை சேர்க்க வேண்டும். அதில் இஞ்சி-பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.

இதை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீ வடித்துவிட்டு அரிசியை இதில் சேர்க்க வேண்டும்.

அரிசியையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

இதில் தேவையான அளவு உப்பு, சுடு தண்ணீர் சேர்த்து கொதி வந்தபின், அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.

மூடியிட்டு மூடி, 20 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். நீங்கள் குக்கரில் செய்தால், 1அல்லது 2 அல்லது நீங்கள் வழக்கமாக விடும் அளவு விசில் விட்டுக்கொள்ள வேண்டும்.

இதை சமைக்கும்போதே, அருகில் ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை, மிதமான தீயில் நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தீயவிட்டுவிடாதீர்கள் (இதில் கேரட்டையும் வேண்டுமானால் வறுத்து சேர்த்துக்கொள்ளலாம்)

அரிசி வெந்துகொண்டிருக்கும்போதே, மூடியைத்திறந்து, வறுத்த வெங்காயங்களை மேலே சேர்க்க வேண்டும். நறுக்கிய கொத்தமல்லித்தழையையும் சேர்க்க வேண்டும். அதன் மீது வறுத்த முந்திரியையும் சேர்க்க வேண்டும். கேரட் சேர்க்க விரும்பினால் அவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மேலே ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக மூடிவிடவேண்டும். அடுத்த 5 நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால், பொலபொலவென நெய்சோறு அனைத்து மசாலக்களும், காய்கறிகளும் சேர்ந்து மணக்கும் சுவையில் சாப்பிடத் தயாராக இருக்கும்.

பின்னர் திறந்து சாதம் உடைந்து விடாமல் கிளறவேண்டும்.

அதனுடன், வெஜ் அல்லது நான்-வெஜ் கிரேவி சேர்த்து பரிமாற வேண்டும். வெங்காயம், வெள்ளரி ரைத்தா சிறந்த சாய்ஸ்.

கேரளாவில் பிரபலமான நெய்ச்சோறு, பேரிச்சம்பழ ஊறுகாய், சிக்கன் கிரேவியுடன் அள்ளும் சுவையில் இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்