தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Karuppu Kavuni Riceதித்திக்கும் சுவையான கருப்பு கவுனி அல்வா.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Karuppu Kavuni riceதித்திக்கும் சுவையான கருப்பு கவுனி அல்வா.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 25, 2023 11:00 AM IST

கருப்பு கவுனி அரிசியில் தித்திக்கும் சுவையான அல்வா செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்

கருப்பு கவுனி
கருப்பு கவுனி

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

கவுனி அரிசி

தேங்காய்

நெய்

தேங்காய் எண்ணெய்

சீனி

பாதாம்

முந்திரி

திராட்சை

உப்பு

ஏலக்காய்

செய்முறை

கருப்பு கவுணி அரிசியை நன்றாக 3 முறை கழுவிய பின் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறிய அரிசியை மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அரைப்பதற்கு ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தண்ணீர் கருப்பாக இருந்தாலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கும்

இதையடுத்து தேங்காயை மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கும் அரிசி ஊறி வைத்த தண்ணீரை பயன்படுத்தி கெள்ளலாம்.

இதையடுத்து அடி கனமான பாத்திரத்தில் அரைத்த கவுனி அரிசியை சேர்த்து கொள்ள வேண்டும். அதை நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரம் கிளறிய பின் அரிசி கெட்டியான பதத்திற்கு வரும்போது அரைத்து வைத்த தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். இதையடுத்து தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பாரம்பரிய செட்டி நாடு ஸ்டெயில் செய்ய விரும்பினால் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளலாம். 

இதையடுத்து ஒரு கப் அரிசிக்கு 2 கப் சர்க்கரையை கலந்து கொள்ள வேண்டும். இதில் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும். நன்றாக கெட்டி பதத்திற்கு வரும் போது ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும். அல்வா பதத்திற்கு திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது வேறு ஒரு நெய் தடவிய டிரேக்கு மாற்றி ஆற விட வேண்டும். அதன் மேற்பகுதியில் பாதாம், முந்திரி, திராட்சை பழங்களை விருப்பத்திற்கு ஏற்ற அளவு சிறிது சிறிதாக நறுக்கி தூவி ஆற விட வேண்டும். அப்போதே சிறிது சிறிதாக நமக்கு பிடித்த வடிவத்தில் பீஸ் போட்டு கொள்ளலாம்.

உடனே சாப்பிடுவது என்றால் அப்படியே சாப்பிடலாம். மெதுவாக சாப்பிட வேண்டும் என்றால் அல்வா நன்றாக ஆறிய பின் காற்று புகாத பாத்திரத்திற்கு மாற்றி ப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்