கடுப்பேத்துறார் மை லார்ட்! உங்களை கடுப்பேத்தும் கடி ஜோக்ஸ்! இத படிங்க முதல்ல!
காமெடி காட்சிகளை பார்த்து மனதை இலகுவாக மாற்ற முடியாத சமயங்களில் கடி ஜோக்குகளை படித்து சிரித்துக் கொள்ளலாம். உங்களை மகிழ்ச்சியில் ஆழத்தும் அதே சமயத்தில் சற்று கடுப்பேத்தும் கடி ஜோக்குகளை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரச்சனையால் நமது நாளே சொதப்பல் ஆகி விடும். எந்த பிரச்சனை இல்லையென்றாலும் ஏதாவது ஒன்றை யோசித்து கொண்டிருப்பதே நமது மூளையின் முதன்மையான வேலையாகி விட்டது. உங்களது நாளை கொஞ்சம் சுறு சுறுப்பாக்கவும் சற்று மகிழ்ச்சியாகவும் மாற்ற பல கடி ஜோக்குகள் உள்ளன. டிவி சேனல்களில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் இந்த கடி ஜோக்குகள் வருவது வழக்கமாகி விட்டது. காமெடி காட்சிகளை பார்த்து மனதை இலகுவாக மாற்ற முடியாத சமயங்களில் கடி ஜோக்குகளை படித்து சிரித்துக் கொள்ளலாம். உங்களை மகிழ்ச்சியில் ஆழத்தும் அதே சமயத்தில் சற்று கடுப்பேத்தும் கடி ஜோக்குகளை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
கேள்வி பதில் ஜோக்குகள்
1. எலுமிச்சை பழம் ஒரு ஆணா அல்லது பெண்ணா?
எலுமிச்சை பழம் ஒரு ஆண் தான். ஏனென்றால் இதனை பிழியும் போது “சார்” வருக்கிறதே. அதனால் இது ஒரு ஆண் பழம் தான்.
2. எல்லா stage லயும் டான்ஸ் ஆட முடியும். ஆனால் டான்ஸ் ஆட முடியாத ஸ்டேஜ் எது?
அது தான் Coma ஸ்டேஜ். ஏன்னா அந்த ஸ்டேஜ்ல உங்களால ஏந்திருச்சு நிக்கவே முடியாது.
3. ஒரு அரக்கன் ஒரு அரக்கிய வைத்து ஒரு பூட்டை திறக்க போனானாம்? ஆனால் அவனால அதிக திறக்க முடியலையாம், ஏன்?
அறக்கீயை வைத்து திறந்த எப்படி திறக்க முடியும். முழுக்க கீயையும் வைத்து தான திறக்க முடியும்.
4. வட்டம் அறிவாளியா? இல்லை சதுரம் அறிவாளியா?
சதுரம் தான் அறிவாளி. ஏன்னா அதுக்குதான் நான்கு மூலை இருக்குது.
5. ஒருத்தன் எக்ஸாம் எழுதும் போது டான்ஸ் ஆடிட்டே எழுதுனனாம், ஏன்?
ஏன்னா அது மேக்ஸ் எக்ஸாம், மேக்ஸ் எக்ஸாம்லதான் ஒவ்வொரு ஸ்டெப்ஸ்க்கும் மார்க் இருக்கே.
6. மேடு இன் சைனாக்கு ஆப்போசிட் என்ன தெரியுமா?
பள்ளம் இன் சைனா தான். மேடுக்கு பள்ளம் தானா ஆப்போசிட்.
7. அதிக கூலான ஆங்கில எழுத்து என்னத் தெரியுமா?
வேற என்ன b தான் ஏன்னா a c இரண்டுக்கும் நடுவுல இருக்கே. அப்போ அது தானா ரொம்ப கூலா இருக்கும்.
8. உலகத்துல எந்த தொழில் நிறைய பணத்தை கொடுக்கும்?
வேற யாரு பல் டாக்டர் தான். ஏன்னா அவரு தான் எல்லாரு சொத்தையும் புடுங்குறாரே, அவருகிட்ட தானா நிறைய சொத்து இருக்கும்.
9. ஒரு பையன் எக்ஸாம் எழுத போயி எழுதமாலேயே திரும்பி வந்துட்டானாம் ஏன்?
அவன் எழுத போனது return எக்ஸாம் ஆம். அதான் எழுதாமலேயே ரிட்டர்ன் வந்துட்டான்.
10. சிக்கனுக்கு பிடிக்காத கிழமை எது?
வேற என்ன "fri" Day தான். அன்னைக்கு தான இத ஃப்ரை பண்ணிடுறாங்க.
11. பண்ணுல தண்ணீர் ஊத்துன என்ன ஆகும் தெரியுமா?
பன்னும் தண்ணீரும் சேர்ந்து பன்னீர் ஆகிடும்.
12. வெயிட் இல்லாத ஹவுஸ் எது?
வெயிட் இல்லாத ஹவுஸ்னா லைட் ஹவுஸ் தான். இது தான் லைட்டா இருக்குமே.
டாபிக்ஸ்