HBD Paul Adams: எகிறி குதித்தேன்…ஸ்டம்புகள் பறந்தது! தனித்துவமான பவுலிங் ஸ்டைல் கொண்ட சைனாமென் பவுலர் பால் ஆடம்ஸ்
- ஆசிய ஆடுகளங்களான இந்தியா, பாகிஸ்தான் மைதானங்களில் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்திய தென் ஆப்பரிக்கா ஸ்பின் பவுலராக இருந்தார். இவரது சாதனையை கேசவ் மகராஜ் முறியடித்தார்.
- ஆசிய ஆடுகளங்களான இந்தியா, பாகிஸ்தான் மைதானங்களில் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்திய தென் ஆப்பரிக்கா ஸ்பின் பவுலராக இருந்தார். இவரது சாதனையை கேசவ் மகராஜ் முறியடித்தார்.
(1 / 6)
தென் ஆப்பரிக்கா கிரிக்கெட்டில் 90களின் இறுதியிலும், 2000ஆவது ஆண்டு தொடக்கத்திலும் முக்கிய ஸ்பின் பவுலராக இருந்தார் பால் ஆடம்ஸ். தனித்துவமான பவுலிங் ஸ்டைல் மூலம் கவனத்தை ஈரத்த இவர், பேட்ஸ்மேன்களை பார்க்காமல் பந்து வீசும் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னராக இருந்தார். கட்டை விரல், ஆள்காட்டி விரலை வைத்து மட்டும் பந்தை பிடித்து பவுலிங் செய்யும் இவரை சைனமென் பவுலர் என்று அழைப்பார்கள்
(2 / 6)
பால் ஆடம்ஸ் பவுலிங் ஸ்டைலை ப்ளெண்டரில் அடைப்பட்ட தவளை என பலரும் கூறுவதுண்டு. 18 வயதில் அறிமுகமான இவர், தென் ஆப்பரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் களமிறங்கிய இளம் வயது வீரராக இருந்தார். டீன் ஏஜ் வயதிலேயே 5 விக்கெட் வீழ்த்திய தென் ஆப்பரிக்கா வீரர் என பெருமையை தன் வசம் வைத்துள்ளார்
(3 / 6)
தென் ஆப்பரிக்கா அணியில் இனவெறி சர்ச்சையானது இன்றும் கூட நிலவி வரும் நிலையில், அந்த பிரச்னையை சக வீரர்களால் சந்தித்தவர்களில் ஒருவராக பால் ஆடம்ஸ் உள்ளார்
(4 / 6)
சக வீரர்களான ஹெர்செல் கிப்ஸ், ஆண்ட்ரே நெல், ரோஜர் டெலிமேகஸ், கிரேக் ஸ்மித், ஜஸ்டின் கெம்ப் ஆகியோருடன் இணைந்து மரிஜுவான என்ற போதை வஸ்து எடுத்துக்கொண்டதற்காக இவருக்கு கிரிக்கெட் தென் ஆப்பரிக்கா ஆபராதம் விதித்தது
(5 / 6)
காயத்தால் விளையாட முடியாமல் போன பால் ஆடம்ஸ், நான்கு ஆண்டுகள் டெஸ்ட் அணியிலும், ஐந்து ஆண்டுகள் ஒரு நாள் அணியிலும் தேர்வு செய்யப்பட்டாத நிலையில், தனது 31வது வயதிலேயே ஓய்வை அறிவித்தார்
(6 / 6)
பால் ஆடம்ஸ் பவுலிங் ஸ்டைல் இமிடேட் செய்வதற்கு மிகவும் கடினமானதாகவே இருக்கும். பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல் கழுத்து, இடுப்பு என உடலையே வளைத்து லாவகமாக இவர் பந்து வீசும் ஸ்டைல் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கும். இன்று வரையிலும் இவரை போல் வித்தியாசமான பவுலிங் ஸ்டைலில் பந்து வீசும் சர்வதேச வீரர் கிடையாது
மற்ற கேலரிக்கள்