Joint Pain : மூட்டு வலியை ஏற்படுத்தும் யூரிக் ஆசிட்! இந்த பருப்புகள் எடுப்பதை கட்டுப்படுத்துங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Joint Pain : மூட்டு வலியை ஏற்படுத்தும் யூரிக் ஆசிட்! இந்த பருப்புகள் எடுப்பதை கட்டுப்படுத்துங்கள்!

Joint Pain : மூட்டு வலியை ஏற்படுத்தும் யூரிக் ஆசிட்! இந்த பருப்புகள் எடுப்பதை கட்டுப்படுத்துங்கள்!

Priyadarshini R HT Tamil
Feb 03, 2024 01:30 PM IST

Joint Pain : மூட்டு வலியை ஏற்படுத்தும் யூரிக் ஆசிட்! இந்த பருப்புகள் எடுப்பதை கட்டுப்படுத்துங்கள்!

Joint Pain : மூட்டு வலியை ஏற்படுத்தும் யூரிக் ஆசிட்! இந்த பருப்புகள் எடுப்பதை கட்டுப்படுத்துங்கள்!
Joint Pain : மூட்டு வலியை ஏற்படுத்தும் யூரிக் ஆசிட்! இந்த பருப்புகள் எடுப்பதை கட்டுப்படுத்துங்கள்!

பருப்பு இந்திய உணவுகளில் இருந்து பிரிக்க முடியாத ஒன்று. பருப்பு இல்லாமல் இந்திய உணவுகளே இல்லை. மேலும் அவை உடலுக்கு தேவையான புரதச்சத்தை கொடுத்து உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றன.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பருப்பு வகைகளை நாம் எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் அதிகளவில் யூரிக் அமிலங்கள் சுரப்பதற்கும், மூட்டு வலியை அதிகரிக்கவும், உடலில் யூரிக் அமிலங்கள் அதிகளவில் சுரக்கவும் வழிவகுக்கிறது.

இந்த ஆரோக்கியமான பருப்பு வகைகளை நீங்கள் உங்கள் உணவில் சேர்ப்பது கட்டாயம்தான், ஆனால், சில பருப்புகள் உங்கள் உடல் வலிக்கும், உடலில் யூரிக் அமிலம் அதிகம் சுரப்பதற்கும் காரணமாகின்றன. எனவே உங்களுக்கு யூ

பருப்புகள் உங்கள் உடலில் யூரிக் அமில அளவு சுரப்பதை எப்படி பாதிக்கிறது?

பருப்புகள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் யூரிக் அமில அளவை அதிகரிக்காது. அதிக யூரிக் அமிலம் சுரப்பு பிரச்னைகள் உள்ளவர்கள், பருப்பில் உள்ள ப்யூரின்ஸ் என்ற அமில சுரப்பை ஏற்கும் திறன் அற்றவர்களாக இருப்பார்கள். 

சரியான அளவில் நாம் பருப்புக்களை எடுத்துக்கொள்வது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. ஆனால், அதிகளவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு அது ஆபத்தை ஏற்படுத்தும். அதிகளவு ப்யூரின்கள் கொண்ட பருப்புகள் எவற்றை எடுப்பதில் கவனம் வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கேசரி பருப்பு, சிவப்பு பருப்பு அல்லது மசூர் தால்

கேசரி பருப்பு என்று தமிழ்நாட்டில் அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் இதை மக்கள் மசூர் தால் என்று கூறுகிறார்கள். இதில் மற்ற பருப்புக்களை ஒப்பிடும்போது அதிகளவில் ப்யூரின்கள் உள்ளது. 

இதில் புரதச்சத்து மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே அதை குறைவான அளவு மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக ஏற்கனவே யூரிக் அமில பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த பருப்பை தவிர்த்தலே நலம்.

கடலை பருப்பு

கடலை பருப்பில் மிதமான அளவில் ப்யூரின் உள்ளன. இது இந்திய உணவுகளில் அதிகளவில் பயன்படுத்தக்கூடியது. இது சரிவிகித உணவில் ஒரு பகுதியாகவும் உள்ளது. இதையும் யூரிக் அமில பிரச்னைகள் உள்ளவர்கள் குறைவாக அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருப்பு உளுந்து

கருப்பு உளுந்தில் அதிகளவில் ப்யூரின்கள் உள்ளது. பல்வேறு இந்திய உணவுகளில் இது மிகவும் முக்கியமானது. குறிப்பாக நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் இட்லி, தோசை உள்ளிட்டவற்றில் கருப்பு உளுந்துதான் அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எனவே, யூரிக் அமிலக்கோளாறுகள் உள்ளவர்கள் கருப்பு உளுந்து எடுத்துக்கொள்ளும் அளவை குறைக்க வேண்டும்.

பாசிப்பயிறு

பாசிப்பயிறிலும் அதிகளவில் ப்யூரின்கள் உள்ளன. உடைத்த பயிரைவிட முழு பயிரில் அதிகளவில் ப்யூரின்கள் உள்ளன. இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இதில் உள்ள நார்ச்சத்து நீங்கள் அதிகம் எடுத்துக்கொள்ளும்போது உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கிறது.

உடலில் இந்த ப்யூரின்களின் அளவு அதிகரித்தால், அவை யூரிக் ஆசிடை அதிகம் சுரக்க வைக்கிறது. இதனால் அவற்றை சிறுநீரகம் முழுமையாக வடிகட்ட முடியாமல் உடலில் தங்கி, மூட்டுகளின் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.