பனிக்காலத்தில் வாட்டும் மூட்டு வலி; என்ன செய்து சரியாக்கலாம்? இதோ இந்த குறிப்புகள் உதவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பனிக்காலத்தில் வாட்டும் மூட்டு வலி; என்ன செய்து சரியாக்கலாம்? இதோ இந்த குறிப்புகள் உதவும்!

பனிக்காலத்தில் வாட்டும் மூட்டு வலி; என்ன செய்து சரியாக்கலாம்? இதோ இந்த குறிப்புகள் உதவும்!

Priyadarshini R HT Tamil
Dec 21, 2024 12:11 PM IST

பனிக்காலத்தில் வாட்டும் மூட்டுவலியை சரியாக்கும் வழிகள் என்ன?

பனிக்காலத்தில் வாட்டும் மூட்டு வலி; என்ன செய்து சரியாக்கலாம்? இதோ இந்த குறிப்புகள் உதவும்!
பனிக்காலத்தில் வாட்டும் மூட்டு வலி; என்ன செய்து சரியாக்கலாம்? இதோ இந்த குறிப்புகள் உதவும்!

உங்களை வார்மாக வைத்துக்கொள்ளுங்கள்

நீங்கள் அதிக ஆடைகள் அணிந்து உங்களை சூடாக வைத்துக்கொள்ளவேண்டும். இதமான போர்வைகளைப் போர்த்திக்கொண்டு உங்களை இதமாக்கி மூட்டுக்களை காத்துக்கொள்ளலாம். சூடான தண்ணீரில் குளிப்பது உங்கள் மூட்டுகளில் உள்ள இறுக்கத்தைப் போக்க உதவும். இதனால் உங்கள் உடலில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

சுறுசுறுப்புடன் இருங்கள்

நீங்கள் சுறுசுறுப்புடன் இருக்க குறைந்தபட்ச உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். நடைப்பயிற்சி, யோக மற்றும் நீச்சர் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. இது உங்கள் மூட்டுகளின் நெகிழ்தன்மையை அதிகரிக்கும். அவற்றை இறுக்கமாக்காது. நீண்ட நேரம் உங்கள் மூட்டுகள் நன்றாக இயங்க இது உதவும்.

சூடு மற்றும் குளிர் தெரபி

உங்கள் மூட்டுகளில் உள்ள இறுக்கத்தைப்போக்க ஹாட் வாட்டர் பேக்குகளை வைத்து ஒத்தடம் கொடுத்துக்கொள்ளுங்கள். ஐஸ்கட்டி பேக் ஒத்தடமும் உங்களின் மூட்டுகளில் வீக்கத்தைக் குறைத்து, வலிகளைப் போக்கும். எனவே இவையிரண்டையும் மாற்றி, மாற்றி செய்தால் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

மூட்டுக்கு அதிக வேலை

உங்கள் மூட்டுக்கு அதிக வேலை கொடுக்கும் வேலைகளை செய்யாதீர்கள். உங்களுக்கு அதிக வேலை இருந்தால் அவற்றை கொஞ்சம், கொஞ்சமாக செய்து முடியுங்கள். தேவையான உபகரணங்களை உபயோகியுங்கள். தேவைப்படும்போது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் எவ்வித பிரச்னைகளும் வராமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

வைட்டமின் டி சப்ளிமென்ட்

குளிர்காலத்தில் சூரிய ஒளி அதிகம் கிடைக்காது. இதனால் உங்கள் உடலில் வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படும். இது உங்கள் மூட்டுகளில் அதிக வலிகளை ஏற்படுத்தும். எனவே வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது வைட்டமின் டி சப்ளிமென்ட்களை சாப்பிடவேண்டும். உங்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் நீங்கள் மாத்திரைகளை சாப்பிடுவது நல்லது.

மசாஜ்

ஒரு நல்ல எண்ணெய் மசாஜ் செய்துகொள்வது உங்களுக்கு நல்லது. இது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி மசாஜ் செய்துகொள்ளுங்கள்.

மூட்டுகளுக்கு உதவும் பொருட்களை பயன்படுத்துங்கள்

மூட்டு, எல்போக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்களை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்துங்கள் அல்லது அழுத்தமான கிளவுஸ்களைப் பயன்படுத்துங்கள். இது உங்கள் மூட்டுகளை வலுப்படுத்தும். உங்கள் அன்றாட பணிகளின்போது உங்களுக்கு ஏற்படும் அசவுகர்யங்களைப் போக்கும்.

ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள்

உங்களின் அதிக எடை உங்கள் மூட்டுகளை பாதிக்கும். எனவே ஆரோக்கியமான உடல் எடையை நீங்கள் பராமரிப்பது உங்கள் மூட்டுகளை காக்க உதவும். இது உங்களின் தேவையற்ற வலிகளைப்போக்கும். குறிப்பாக உடலின் எடையை தாங்கும், இடுப்பு, மூட்டுகள் போன்றவற்றுக்கு ஆறுதல் கிடைக்கும்.

நீர்ச்சத்துக்கள்

நாள் முழுவதுக்கும் தேவையான அளவு தண்ணீரை நீங்கள் கட்டாயம் பருகவேண்டும். இது உங்களுக்கு போதிய நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. உங்களின் மூட்டுகள் எண்ணெய் பதத்துடன் இருக்க உதவுகிறது. மூட்டுகளில் அசவுகர்யங்கள் மற்றும் இறுக்கத்தைப் போக்குகிறது.

வீக்கத்துக்கு எதிரான உணவுகள் உட்கொள்வது நல்லது

உங்கள் உணவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்த உணவை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது, சால்மன் மீன், வால்நட்கள் மற்றும் ஃப்ளாக்ஸ்சீட்களை உணவில் கட்டாயம் சேர்க்கவேண்டும். இஞ்சி, மஞ்சள் மற்றும் கீரைகளை அதிகளவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை வீக்கத்தை எதிர்த்து போராடும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.