தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Iyengar Style Puliyodharai Thokku: புளியோதரை பிரியர்களுக்கு அலாதியான சுவை தரும் - ஐய்யங்கார் ஸ்டைல் தொக்கு! இதோ ரெசிபி!

Iyengar Style Puliyodharai Thokku: புளியோதரை பிரியர்களுக்கு அலாதியான சுவை தரும் - ஐய்யங்கார் ஸ்டைல் தொக்கு! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Sep 22, 2023 11:45 AM IST

Iyengar Style Puliyodharai Thokku : புளியோதரை பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. புளிதொக்கு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஐய்யங்கார் வீட்டு புளியோதரை தொக்கு செய்வது எப்படி?
ஐய்யங்கார் வீட்டு புளியோதரை தொக்கு செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன் துருவியது

பொடி செய்ய தேவையான பொருட்கள்

சீரகம் – 1 ஸ்பூன்

வர மல்லி – 1 டேபிள் ஸ்பூன்

உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு – 1 ஸ்பூன்

வர மிளகாய் – 7

எள்ளு – 1 டேபிள் ஸ்பூன்

துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்

பொட்டுக்கடலை- 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – கால் கப்

கடுகு – 1 ஸ்பூன்

பெருங்காயம் – அரை ஸ்பூன் பொடித்தது

கடலை – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

வர மிளகாய் – 5

செய்முறை

புளியை சூடான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்து நன்றாக பிழிந்து, புளித்தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை சூடாக்கி சீரகத்தை சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக்கொள்ள வேண்டும். இதை தனியாக தட்டில் வைத்துவிடவேண்டும்.

அதே கடாயில் வர கொத்தமல்லியைசேர்த்து நன்றாக சிவக்க வறுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் உளுந்தை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். இதையும் சிவக்கவிட்டு, ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வர மிளகாயை கடாயில் சேர்த்து நன்றாக பொரிந்து வரும்வரை வறுத்து, தனியாக வைக்க வேண்டும்.

அடுத்ததாக எள்ளு சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். சிவந்தவுடன் அதையும் எடுத்து தனியாக வைத்துவிடவேண்டும்.

அடுத்ததாக தேங்காயை சேர்த்து சிவக்கும் வரை வறுத்துவிட்டு தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இவையனைத்தையும் தனியாக எடுத்து ஆறவைத்து, ஒரு மிக்ஸிஜாரில் சேர்த்து ஒன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு அடிக்கனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில் புளிக்கரைசலை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.

அது பச்சை வாசம் போகும் வரை கொதித்தவுடன், அரைத்து வைத்துள்ள புளியோதரை மசாலாப்பொடியை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

புளிக்கரைசலும், புளியோதரை பொடியும் நன்றாக கலந்து, தொக்கு பதத்திற்கு வரவேண்டும். இப்போது துருவிய வெல்ல சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, அடுப்பை அணைத்துவிடவேண்டும்.

தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகை பொரிய விடவேண்டும். பின்னர் பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். வர மிளகாய், கடலை சேர்த்து நன்றாக சிவக்க விடவேண்டும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து அனைத்தும் பொரிந்தவுடன் அடுப்பை அனைத்துவிடவேண்டும்.

இப்போது ஏற்கனவே தயாராக உள்ள தொக்கில் தாளிப்பை சேர்த்து நன்றாக கலந்தவிடவேண்டும்.

இதை நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு தேவைப்படும்போது ஆறிய சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்