தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Is There A Link Between Gym And Heart Attack Here Are The Common Symptoms That Precede A Heart Attack

Gym and Heart attack: ஜிம்மிற்கும் மாரடைப்புக்கும் தொடர்ப்பு உள்ளதா? மாரடைப்புக்கு முன் வரும் பொதுவான அறிகுறிகள் இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 14, 2024 11:32 AM IST

மாரடைப்புக்கு முன் வரும் பொதுவான அறிகுறிகள் உள்ளன. திடீரென நெஞ்சு வலி கடுமையாகத் தோன்றும். இதயத்திற்கு அருகில் அசௌகரியம், அழுத்தம், சுவாசிப்பதில் சிரமம் அல்லது லேசான வலி போன்றவற்றை உணர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவும். உடற்பயிற்சி செய்வதை உடனடியாக நிறுத்துவது முக்கியம்.

ஜிம்மிற்கும் மாரடைப்புக்கும் தொடர்ப்பு உள்ளதா?
ஜிம்மிற்கும் மாரடைப்புக்கும் தொடர்ப்பு உள்ளதா? (Pixabay)

ட்ரெண்டிங் செய்திகள்

உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் அதிக உடற்பயிற்சி செய்த பிறகு மாரடைப்பால் இறக்கும் நிகழ்வுகள் பல உள்ளன. இதுபோல் பல பிரபலங்களும் இறந்துள்ளனர். ஜிம்மிற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருப்பதாக பலர் பயப்படுகிறார்கள். அதிகப்படியான உடற்பயிற்சியின் போது இதய செயலிழப்பு பொதுவானது, எனவே உடற்பயிற்சி செய்யும் போது இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால் உடனடியாக கவனித்துக் கொள்ளுங்கள். மாரடைப்புக்கு முன் இதே போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

ஜிம் உடற்பயிற்சிகளின் போது உங்கள் உடலை மிகவும் கடினமாக தள்ள வேண்டாம். அதிக உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தேவையான அளவு செய்யுங்கள். உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சியை விட சிறந்த உடற்பயிற்சி இல்லை.

இளைஞர்கள் தசைகளை வளர்க்கவும், சிக்ஸ் பேக் எடுக்கவும் ஜிம்மிற்கு செல்கிறார்கள். அத்தகையவர்கள் அதிகப்படியான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது அவசியம். அதே சமயம் இதயத்திற்கு அதிக வேலை கொடுப்பது நல்லதல்ல. அதிகப்படியான உடற்பயிற்சி இதய திசுக்களை சேதப்படுத்தும். சில நேரங்களில் இதய செயலிழப்பும் ஏற்படுகிறது. எனவே உடற்பயிற்சி செய்யும் போது இதயத்தில் அசௌகரியம் ஏற்பட்டால், உடனடியாக நிறுத்துங்கள்.

மாரடைப்புக்கு முன் வரும் பொதுவான அறிகுறிகள் உள்ளன. திடீரென நெஞ்சு வலி கடுமையாகத் தோன்றும். இதயத்திற்கு அருகில் அசௌகரியம், அழுத்தம், சுவாசிப்பதில் சிரமம் அல்லது லேசான வலி போன்றவற்றை உணர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவும். உடற்பயிற்சி செய்வதை உடனடியாக நிறுத்துவது முக்கியம். மூச்சுத் திணறல் கூட சில சமயங்களில் மாரடைப்பின் அறிகுறியாகக் கருதப்படும்.

உடற்பயிற்சியின் போது அல்லது அதற்குப் பிறகு நீங்கள் தலைச்சுற்றல், மார்பு வலி, மயக்கம் அல்லது தலைச்சுற்றல் போன்றவற்றை அனுபவித்தால் அதை எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். படபடப்பு ஒரு அசாதாரண இதய தாளத்தையும் குறிக்கலாம்.

அதிகமாக வியர்ப்பதும் மாரடைப்புக்கான அறிகுறியாகும். உடற்பயிற்சியின் போது வியர்ப்பது பொதுவானது. ஆனால் அசாதாரணமாக வியர்த்தால் மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம். உடற்பயிற்சி செய்யும் போது உடலில் ஏதேனும் அசௌகரியம் அல்லது இதய வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக மறக்காதீர்கள்.

இடது கையில் வலி, கழுத்து முதல் தாடை வரை வலி, அடிவயிற்றில் அசௌகரியம், கடுமையான அழுத்தம். இவை அனைத்தும் இதய நோயைக் குறிக்கின்றன. ஒர்க் அவுட் செய்யும்போது இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அப்படி செய்வது பின்னாளில் விபரீதமான முடிவுகளை தர வாய்ப்பு உள்ளது.

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தான் உடற்பயிற்சியே தவிர உடலையும் உயிரையும் வதைப்பதற்கு அல்ல என்ற புரிதல் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியது அவசியம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்