சர்க்கரைக்குப் பதிலாக செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? அமெரிக்க உணவு நிர்வாகம் கூறுவது என்ன?
சர்க்கரை நோயாளிகள் மட்டும் அல்லாது உணவுக் கட்டுபாடு உள்ளவர்களும் சர்க்கரைக்கு பதிலாக ஒரு மாற்று உணவை பயன்படுத்துகின்றனர். செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சர்க்கரை பாதுகாப்பானதா என்ற கேள்வியும் இருந்து வருகிறது.
சர்க்கரையை விட செயற்கையான இனிப்பு பயன்படுத்த மக்கள் ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் சர்க்கரையைப் போல கலோரிகள் இதில் இல்லை . இன்று சந்தையில் கிடைக்கும் செயற்கை இனிப்புகளின் பல பிராண்டுகளின் முக்கிய கூற்று இதுதான். ஆனால் அதிகப்படியான சர்க்கரையைப் போலவே செயற்கை இனிப்புகளும் தீங்கு விளைவிக்கும் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இது குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆறு செயற்கை இனிப்புகளை அங்கீகரித்துள்ளது. அவை அஸ்பார்டேம், சுக்ரலோஸ், சாக்கரின், அசல்ஃபேம் பொட்டாசியம், நியோடேம் மற்றும் ஆட் வான்டேம் ஆகியவை ஆகும்.
ஆய்வுகள்
பிரான்சில் நடத்தப்பட்ட Nutrinet-Sante Cohort ஆய்வில், அதிக அளவு அஸ்பார்டேம் உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது. உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அஸ்பார்டேமை வகை B புற்றுநோயாக அறிவித்துள்ளது.
மைக்ரோ ஆர்கனிசம்ஸ் இதழில் வெளியிடப்பட்ட 2022 ஆய்வு, சுக்ரோலோஸ் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரிக்கிறது. டிஎன்ஏ பாதிப்பு மற்றும் புற்றுநோயுடன் சுக்ரோலோஸை இணைக்கும் ஆய்வுகள் வெளிவந்துள்ளன . சர்க்கரையை விட 400 மடங்கு இனிப்பான சாக்கரின், 1879 ஆம் ஆண்டு கான்ஸ்டான்டின் ஃபால்பெர்க் என்பவரால் நிலக்கரி தாரின் துணை தயாரிப்புகளை ஆய்வு செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டது. 1970 களில் சாக்கரின் எலிகளில் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பதைக் கண்டறிந்த அமெரிக்க அரசாங்கம் அதை தடை செய்தது, ஆனால் பின்னர் அதை மீண்டும் ஒரு எச்சரிக்கை லேபிளுடன் கிடைக்கச் செய்தது.
இங்கிலாந்து பல்கலைக்கழகம்
சில குறுகிய கால ஆய்வுகள் சல்ஃபேம் பொட்டாசியம் வயிற்றில் பாக்டீரியா மற்றும் எடை அதிகரிப்புக்கு சேதம் விளைவிக்கும் என்று கண்டறிந்துள்ளது. ஆனால் இவற்றை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை. மற்றொரு செயற்கை இனிப்பு, நியோடேம், குடல் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகம் 2024 இல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியோடேம் குடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை சேதப்படுத்துவதன் மூலம் மனிதர்களுக்கு IBS போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் ஆய்வு அறிக்கை கூறுகிறது.
ஆனால் இந்த தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வுகள் மட்டும் அனைத்து செயற்கை இனிப்புகளும் பிரச்சனைக்குரியவை என்ற முடிவுக்கு இட்டுச் செல்லவில்லை. செயற்கை இனிப்புகள் மிதமான அளவில் பாதுகாப்பானது என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சர்க்கரை நோயினால் சர்க்கரையைத் தொட முடியாதவர்களுக்கு, இவை அவ்வப்போது சிறிது இனிப்புச் சேர்க்க உதவும். இருப்பினும் இந்த இனிப்பு பொருட்களை உங்களது உணவில் சேர்க்கும் முன் ஒரு நல்ல மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நன்மை பயக்கும். மேலும் இதனை பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளே பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்