International Day of Older Persons: சர்வதேச முதியோர் தினம்! முதியோர்களை பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  International Day Of Older Persons: சர்வதேச முதியோர் தினம்! முதியோர்களை பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமை!

International Day of Older Persons: சர்வதேச முதியோர் தினம்! முதியோர்களை பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமை!

Suguna Devi P HT Tamil
Oct 01, 2024 06:38 AM IST

International Day of Older Persons: உலகளவில் 65 வயதுடையவர்களும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை இருமடங்காக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2021 இல் 761 மில்லியனிலிருந்து 2050இல்1.6பில்லியனாகஉயரும்.

International Day of Older Persons: சர்வதேச முதியோர் தினம்! முதியோர்களை பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமை!
International Day of Older Persons: சர்வதேச முதியோர் தினம்! முதியோர்களை பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமை!

இருப்பினும், வயதானவர்கள் வயது பாகுபாடு மற்றும் வறுமை உட்பட பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். சுகாதாரம், போக்குவரத்து மற்றும் வீடு போன்ற அத்தியாவசிய சேவைகளை அணுகுவதில் அவர்களுக்கு சிரமம் உள்ளது. சர்வதேச முதியோர் தினம் என்பது முதியவர்களை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் உரிமைகளை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பாகும். இது முதியவர்களின் பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கும் அவர்களின் அறிவு மற்றும் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கும் ஒரு நாள் ஆகும். 

முதியோர் தின வரலாறு 

முதன் முதலாக ஐக்கிய நாடுகள் சபையால் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் நாளை முதியோர் தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக 1982 ஆம் ஆண்டு முதன் முதலாக வியன்னாவில் முதியவர்களுக்கான உலக சபை நடைபெற்றது. அதன் பரிந்துரையை ஏற்ற ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச முதியோர் தினத்திற்கான முன்மொழிவை ஏற்றுக் கொண்டது. 

மக்கள்தொகை முதுமையானவர்களின் எண்ணிக்கை என்பது உலகெங்கிலும் உள்ள சமூகங்களை மறுவடிவமைக்கும் ஒரு முக்கிய உலகளாவிய போக்காகும். பொதுவாக பல நாடுகளில் வாழும் மனிதர்களின் ஆயுட்காலம் 75 வயதாக உள்ளது. இது கடந்த 1950 ஆம் ஆண்டை விட 25 ஆண்டுகள் அதிகம். 2030 ஆம் ஆண்டளவில், முதியவர்கள் உலக அளவில் இளைஞர்களை விட அதிகமாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது, வளரும் நாடுகளில் இந்த அதிகரிப்பு மிக வேகமாக உள்ளது.

மக்கள்தொகையின் அளவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, விரிவான சுகாதாரம், பராமரிப்பு மற்றும் சமூக ஆதரவு சேவைகளுக்கான தேவை கணிசமாக வளர்ந்துள்ளதற்கு காரணம் ஆகும்.  குறிப்பாக டிமென்ஷியா போன்ற நிலைமைகளைக் கொண்ட வயதானவர்களுக்கு சற்று கடினமான சிக்கல்களை உருவாகியுள்ளது. இந்த 2024 ஆம் ஆண்டிற்கான முதன்மை கருப்பொருளாக ‘கண்ணியத்துடன் முதுமை’ என்பது கூறப்பட்டுள்ளது. உலகளவில் முதியோர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் இந்த தினத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

உலகின் அனைத்து மூலைகளில் உள்ள ஒவ்வொரு முதியவர்களும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டியவர்கள். அவர்களின் அனுபவ அறிவை பெற்று இளையவர்கள் அவர்கள் வழியில் நடக்க வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.