Kids Recipes: குழந்தைகளுக்கு வகை வகையான இன்ஸ்டன்ட் கிச்சடி ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kids Recipes: குழந்தைகளுக்கு வகை வகையான இன்ஸ்டன்ட் கிச்சடி ரெசிபி!

Kids Recipes: குழந்தைகளுக்கு வகை வகையான இன்ஸ்டன்ட் கிச்சடி ரெசிபி!

I Jayachandran HT Tamil
Jun 04, 2023 03:42 PM IST

குழந்தைகளுக்கு வகை வகையான இன்ஸ்டன்ட் கிச்சடி ரெசிபி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு வகை வகையான இன்ஸ்டன்ட் கிச்சடி
குழந்தைகளுக்கு வகை வகையான இன்ஸ்டன்ட் கிச்சடி

இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ் செய்வது எப்படி?

இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ் செய்யத் தேவையானவை-

· அரிசி - 100 கி

· பாசிப்பருப்பு - 100 கி

· சீரகம் - 1 தேக்கரண்டி

· மிளகு - 6

இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ் செய்முறை-

அரிசியை நன்கு கழுவிய உடனே வடிகட்டிக் கொள்ளவும்.அதை பானில் போட்டு வறுக்கவும். ஈரம் நீங்கி நன்கு வறுத்து இருக்க வேண்டும். அதேபோல பாசி பருப்பை நன்கு கழுவிய உடனே வடிகட்டி கொள்ளவும். அதையும் பானில் போட்டு வறுக்கவும்.ஈரம் நீங்கி நன்கு வறுத்து இருக்க வேண்டும். தீ மிதமான அளவில் இருப்பது நல்லது.மிளகு, சீரகத்தை நன்கு வறுத்துக்கொள்ளவும்.வறுத்த அனைத்தையும் நன்றாக ஆறவிடவும். மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக்கொள்ளவும். காற்று புகாத டப்பாவில் சேமித்துப் பாதுகாக்கலாம். 2-3 மாதம் வரை வைத்திருக்கலாம்.

2.கேரட் இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ்

· ஒரு பவுலில் 2 தேக்கரண்டி கிச்சடி மிக்ஸ் சேர்க்கவும்.

· தேவையான வெந்நீர் சேர்த்துக் கலக்கவும்.

· வேகவைத்த கேரட்டை கரண்வியால் நன்கு மசித்துக்கொள்ளவும்.

· மசித்த கேரட்டை கிச்சடியில் சேர்க்கவும்.

· அவ்வளவுதான் கேரட் கிச்சடி தயார்.

·

3.இனிப்பு டேட்ஸ் கிச்சடி மிக்ஸ்

· ஒரு பவுலில் 2 தேக்கரண்டி கிச்சடி மிக்ஸ் சேர்க்கவும்.

· தேவையான வெந்நீர் சேர்த்துக் கலக்கவும்.

· இதனுடன் டேட்ஸ் சிரப் சேர்க்கவும்.

· இனிப்பு கிச்சடி தயார்.

4.நட்ஸ் கிச்சடி மிக்ஸ்

· ஒரு பவுலில் 2 தேக்கரண்டி கிச்சடி மிக்ஸ் சேர்க்கவும்.

· தேவையான வெந்நீர் சேர்த்துக் கலக்கவும்.

· இதனுடன் நட்ஸ் பவுடர் 1 தேக்கரண்டி சேர்க்கவும்.

· சத்தான நட்ஸ் கிச்சடி தயார்.

5. புரோட்டீன் கிச்சடி மிக்ஸ்

· ஒரு பவுலில் 2 தேக்கரண்டி கிச்சடி மிக்ஸ் சேர்க்கவும்.

· தேவையான வெந்நீர் சேர்த்துக் கலக்கவும்.

· இதனுடன் புரோட்டீன் பவுடர் 1 தேக்கரண்டி சேர்க்கவும்.

· சத்தான புரோட்டீன் கிச்சடி தயார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.