Immunity Booster : இந்த ஒரே ஒரு பானம் மட்டும் போதும்! சளி, இருமல், காய்ச்சலை அடித்து விரட்டும்! மழைக்கு இதமானது!-immunity booster just one drink is enough beat colds coughs and fevers perfect for rain - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Immunity Booster : இந்த ஒரே ஒரு பானம் மட்டும் போதும்! சளி, இருமல், காய்ச்சலை அடித்து விரட்டும்! மழைக்கு இதமானது!

Immunity Booster : இந்த ஒரே ஒரு பானம் மட்டும் போதும்! சளி, இருமல், காய்ச்சலை அடித்து விரட்டும்! மழைக்கு இதமானது!

Priyadarshini R HT Tamil
Aug 13, 2024 05:15 AM IST

Immunity Booster : இந்த ஒரே ஒரு பானம் மட்டும் போதும், சளி, இருமல், காய்ச்சலை அடித்து விரட்டும். மழைக்கு இதமானது என்பதால் இந்த மழைக்காலத்தில் தயாரித்து, பருகி பலன்பெறுங்கள்.

Immunity Booster : இந்த ஒரே ஒரு பானம் மட்டும் போதும்! சளி, இருமல், காய்ச்சலை அடித்து விரட்டும்! மழைக்கு இதமானது!
Immunity Booster : இந்த ஒரே ஒரு பானம் மட்டும் போதும்! சளி, இருமல், காய்ச்சலை அடித்து விரட்டும்! மழைக்கு இதமானது!

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

மழைக்காலத்தில் பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுநோய்களை துரத்தியடிக்கும் பானம். இதை தினமும் பருகி உங்களை நோய் அண்டவிடாமல் காத்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

மிளகு – 2 ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

பூண்டு – 4 பல்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

இஞ்சி – 20 கிராம்

வெற்றிலை – 4

செய்முறை

மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தூள், இஞ்சி, வெற்றிலை என அனைத்தையும் உரலில் சேர்த்து ஒன்றிரண்டாக தட்டிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அரை லிட்டர் தண்ணீரில் அனைத்தையும் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கக்கூடாது. தண்ணீர் மற்றும் இடித்த பொருட்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.

அரை லிட்டர் தண்ணீர் பாதியாக கொதித்து சுண்டி வரவேண்டும். 250 மில்லி லிட்டர் தண்ணீர் வந்தவுடன், அதை வடிகட்டி பருகவேண்டும். பெரியவர்கள் 60 முதல் 80 மில்லி லிட்டர் வரையும், சிறியவர்கள் 30 முதல் 50 மில்லி லிட்டர் வரையும் பருகலாம்.

தற்போது மழைக்காலம் துவங்கிவிட்டது. எனவே இந்த பானத்தை நீங்கள் வாரத்தில் இருமுறை உங்களுக்கு உடலில் எந்த உபாதைகளும் இல்லாதபோதும் பருகவேண்டும்.

அப்போதுதான் நீங்கள் மழையில் வெளியே சென்றுவிட்டு வரும்போது எவ்வித தொற்றுகளும் உங்களுக்கு ஏற்படாது. உங்களுக்கு தொற்றுகள் உள்ள நாளில் இதை ஒரு வாரம் தினமும் காலை மாலை இருவேளையும் பருகவேண்டும்.

வழக்கமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு மற்றும் மருந்துகளுடன் இதுவும் சேர்த்து உங்களின் நோய்களை விரைவில் விரட்டியடிக்கும். இதை மிதமான சூட்டில் பருகவேண்டும் என்பதால், காய்ச்சி வைத்துவிடக்கூடாது. தேவைப்படும்போது செய்து கொள்ளவேண்டும்.

இவையனைத்தும் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கக்கூடியவை என்பதால், இது உங்கள் உடலுக்கு நன்மையைத்தரும்.

ஆனால் எவ்வித தீமையையும், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. குளிருக்கு இதத்தையும் தரும். உங்கள் உடலில் எவ்வித பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.