Idly Podi : வழக்கமாக இல்லாமல் இந்த பொருட்களை சேர்த்து செய்து பாருங்க – இட்லி பொடி கூடுதல் சுவை கொடுக்கும்!
Idly Podi : வழக்கமாக இல்லாமல் இந்த பொருட்களை சேர்த்து செய்து பாருங்க, இட்லி பொடி கூடுதல் சுவை கொடுக்கும்.
தேவையான பொருட்கள்
உளுந்து – 1 கப்
கடலை பருப்பு – அரை கப்
எள்ளு – கால் கப் (கருப்பு அல்லது வெள்ளை எது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்)
வர மிளகாய் – 10
எண்ணெய் – 1 ஸ்பூன் (தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்)
பெருங்காயம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
வெந்தயம் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
உங்களுக்கு தேவைப்பட்டால் கூடுதலாக சேர்த்துக்கொள்ளவேண்டியவை
பூண்டு – 5 பல்
புளி – எலந்தப்பழ அளவு
மிளகு – அரை ஸ்பூன்
ஃப்ளாக்ஸ் விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
அனைத்து பொருட்களையும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அடுப்பு குறைவான தீயில் இருக்க வேண்டும். கருகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முதலில் கடலை பருப்பு, உளுந்து, எள் அடுத்ததாக கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்து பொருட்களையும் சரியான பதத்தில் வறுக்க நேரம் தேவைப்படும். எனவே பொறுமையாக வறுத்துக்கொள்ள வேண்டும். பருப்புகள் அனைத்தும் நன்றாக வறுபட்டால்தான இட்லிப்பொடியின் சுவை நன்றாக இருக்கும். பெரும்பாலும் ஒன்றாக வறுப்பதை தவிர்க்கவும். ஒன்றாக வறுத்தால் ஒவ்வொன்றும் வறுபட்ட பின்னர் அடுத்த பொருளை சேர்க்க வேண்டும்.
கருப்பு எள் சேர்த்தால் இட்லிப்பொடியில் கொஞ்சம் அடர்நிறத்தில் இருக்கும். வெள்ளை எள் சேர்த்தால் இட்லிப்பொடி வெளி நிறத்தில் இருக்கும். அனைத்தையும் நன்றாக வறுத்தபின்னர் அந்த கடாயின் சூட்டிலே சிறிது நேரம் அந்தப்பொருட்கள் இருக்கட்டும்.
இவற்றை அவனிலும் வறுத்து எடுத்துக்கொள்ளலாம். அவனில் 150 டிகிரியில் 20-30 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
பின்னர் வறுத்த பொருட்கள் அனைத்தையும், நன்றாக ஆறவைக்க வேண்டும். இரும்பு கடாயில் வறுத்தால் நீண்ட நேரம் சூடு இருக்கும். அதனால் இட்லி பொடியின் சுவையை மாற்றிவிடும். எனவே ஒரு தட்டில் மாற்றி ஆறவைக்க வேண்டும்.
ஆறியபின் காய்ந்த மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து பொடி செய்ய வேண்டும். உடன் உப்பு சேர்த்து, சுவை பார்த்து பொடியை தயார் செய்துகொள்ள வேண்டும்.
இதை காற்றுப்புகாத பாத்திரத்தில் 3 முதல் 6 மாதங்கள் வரை சேமித்து வைத்துக்கொள்ளலாம். உங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தோல் உள்ள உளுந்திலும் இந்த இட்லிப்பொடியை நீங்கள் செய்யலாம்.
இட்லியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடவேண்டும். இதில் சிறிது வெல்லப்பொடி சேர்த்துக்கூட குழந்தைகளுக்கு பரிமாறலாம். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்தப்பொடியை வறுவல் காய்கறிகளிலும் தூவலாம், ஆம்லேட்டிலும் தூவலாம் அவை வித்யாசமான சுவையில் உங்களை சுண்டி இழுக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்