Idly-Dosa Ready Mix : அரிசி-உளுந்து ஊறவைக்க தேவையில்லை! சட்டுன்னு சுடலாம் இட்லி! ரெடிமிக்ஸி ரெசிபி இதோ!
Idly-Dosa Ready Mix : அரிசி-உளுந்து ஊறவைக்க தேவையில்லை! சட்டுன்னு சுடலாம் இட்லி! ரெடிமிக்ஸி ரெசிபி இதோ!
இட்லியோ அல்லது தோசையோ சுடவேண்டும் என்றால், அதற்கு முதல் நாளில் இருந்தே நாம் தயாராக வேண்டும். அரிசியையும், உளுந்தையும் கழுவி ஊறவைக்கவேண்டும். பின்னர் அதை தனித்தனியாக பதமாக அரைத்து எடுக்க வேண்டும்.
8 மணி நேரம் அதை புளிக்கவைத்து எடுக்க வேண்டும். அது மிகப்பெரிய வேலைதான். ஒரு இட்லி சாப்பிட ஒரு நாள் காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது உங்களுக்கு இட்லி ரெடி மிக்ஸ் இருந்தால் எத்தனை நல்லதாக இருக்கும். அதை நீங்களே வீட்டிலே தயாரிக்க முடியும். வேலைக்கு செல்லும் அனைவருக்கும் இது மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 4 கப்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
உளுந்து – ஒரு கப்
(இட்லி அரிசி எடுக்கும் அதே கப்)
செய்முறை
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் அரிசியை சேர்த்து அரிசியை சூடேற்றவேண்டும். அரிசியை நிறைய நேரம் வறுக்கக்கூடாது. அதை வறுத்தால் பொரிந்து பொரியசியாகிவிடும். அதனால் அரிசி மிதமாக சூடோறவேண்டும். அதில் ஒரு ஸ்பூன் வெந்தையத்தை சேர்த்து சூடேற்ற வேண்டும்.
பின்னர் உளுந்தையும் அதுபோல் சூடேற்ற வேண்டும். இரண்டையும் பொன்னிறமாகும் வரை வறுக்கக்கூடாது. உளுந்து வறுபட்டால் இட்லியின் நிறம் மாறிவிடும். எனவே அதையும் சூடேற்ற மட்டுமே வேண்டும்.
பின்னர் இரண்டையும் சேர்த்து நன்றாக ஆறவைத்து, ஈரம் துளி கூட இல்லாத நல்ல காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். நல்ல பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
ரவை பதத்தைவிட பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ரவை பதத்துக்கு வந்தால் சலித்து மீண்டும் பொடி செய்துகொள்ள வேண்டும்.
இந்த பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் 6 மாதங்கள் வரை வைத்துக்கொள்ளலாம்.
இதிலிருந்து இட்லி அல்லது தோசை செய்வதற்கு தேவையான அளவு பொடியை எடுத்து அதனுடன் கால்கப் தயிர் சேர்த்து தண்ணீரில் நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு தண்ணீர் கொஞ்சம் அதிகளவில் தேவைப்படும். ஏனெனில் உளுந்து அப்போதுதான் நன்றாக பொசுபொசுவென்று வரும்.
இதனுடன் ஈனோ உப்பு சேர்க்க வேண்டும். ஈனோ இல்லாவிட்டால் சோடா உப்பு சேர்க்க வேண்டும். ஆனால் சோடா உப்பு சேர்த்தால் 6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
உடனடியாக செய்வதற்கு ஈனோ உப்புதான் சிறந்தது. மேலும் சாதாரண உப்பும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஈனோ அல்லது சோடா உப்பு என்று எதுவுமே சேர்க்கவிடவில்லையென்றால், இதை 14 மணி நேரம் தயிர் சேர்த்து புளிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் இட்லி மிருதுவாக இருக்கும்.
வேலைக்கு செல்பவர்கள் இதை தயாரித்து வைத்துக்கொண்டு இட்லி, தோசை மாவு அரைக்க முடியாத நேரத்தில் இதை செய்து கொள்ளலாம்.
இதை அதிகளவில் செய்தும் வைத்துக்கொள்ளலாம். அதிகளவில் தயாரிக்கும்போது அதை நீங்கள் மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். 4 : 1 இதுதான் அரிசி மற்றும் உளுந்தின் அளவு. இதை எத்தனை மடங்கு வேண்டுமானாலும் பெருக்கிக்கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்