Soan Pappdi: தித்திக்கும் தீபாவளி ஸ்வீட் சோன் பப்டி செய்வது எப்படி?
Soan Pappdi: தீபாவளி பண்டிகை வந்து விட்டாலே பல இனிப்பு பலகாரங்கள் சாப்பிடலாம். அலுவலகம், வீடு என எல்லா இடங்களிலும் இருக்கும் ஒரு ஸ்வீட் தான் சோன் பப்டி , இது வெகுவாக தீபாவளி சமயத்தில் அதிகமாக சாப்பிடப்படுகிறது.
தீபாவளி பண்டிகை வந்து விட்டாலே பல இனிப்பு பலகாரங்கள் சாப்பிடலாம். அலுவலகம், வீடு என எல்லா இடங்களிலும் இருக்கும் ஒரு ஸ்வீட் தான் சோன் பப்டி , இது வெகுவாக தீபாவளி சமயத்தில் அதிகமாக சாப்பிடப்படுகிறது. இந்த சோன் பப்டியை வீட்டிலேயே செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதை முழுமையா படிங்க.
தேவையான பொருட்கள்
ஒரு கப் கடலை மாவு
அரை கப் மைதா மாவு
250 கிராம் சர்க்கரை
300 கிராம் நெய்
சிறிதளவு பிஸ்தா
சிறிதளவு பாதாம்
சிறிதளவு முந்திரி
அரை எலுமிச்சம் பழம்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு வெண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரை கப் அளவுள்ள நெய் ஊற்றி உருக்க வேண்டும். பின்னர் அதில் கடலை மாவை போட்டு நன்கு கிளறவும். பின் அதில் மைதா மாவை போட்டு நன்கு கிளறவும். மிதமான சூட்டில் சிறிது நேரம் வறுத்து வேறு பாத்திரத்தில் மாற்ற வேண்டும். வேறொரு பாத்திரத்தில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி பின்பு சர்க்கரையை அதில் போட்டு ஒரு கரண்டி மூலம் அதை நன்கு கரைத்து விட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும். சிறிது நேரத்திற்கு பின் நன்கு நுரை வந்ததும் அதில் எலுமிச்சை சாரை கலந்து விடவும். பின்பு அதில் சிறிது பெரிய அளவு பபிள்ஸ் வந்ததும் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்து அதில் கொதித்து கொண்டிருக்கும் இந்த சிரப்பில் இருந்து ஒரு கரண்டியின் மூலம் சிறிதளவு எடுத்து இந்த கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரில் ஊற்றவும்.
சிறிது நேரத்திற்கு பிறகு கிண்ணத்தில் ஊற்றிய அந்த சிரப்பை எடுத்து உருட்டினால் அது உருட்டும் வடிவிற்கு வரவேண்டும். அப்படி வந்துவிட்டால் ஒரு பேனை எடுத்து அதில் நெய்யை நன்கு தடவிக் கொள்ளவும். பின்பு அந்த சுகர் சிரப்பை எடுத்து அந்த பேனில் ஊற்ற வேண்டும். பிறகு அது சிறிது கெட்டியானதும், கைகளில் நன்கு நெய் தடவிக்கொண்டு அது நன்கு வெள்ளை நிறம் வரும் வரை அதை நன்றாக இழுத்து இழுத்து விட வேண்டும். அதை நன்றாக இழுத்து விடும் போது சோன் பப்டி மிகவும் மென்மையாக வரும். அது நன்கு வெள்ளை நிறம் வந்ததும் அதை செய்து வைத்திருக்கும் கடலை மாவு கலவையில் போட்டு அதை நன்கு இழுத்து இழுத்தே அதை நன்கு மாவுடன் கலந்து விடவும். இந்த கலவை ஆறுவதற்குள் ஒரு ட்ரையில் வெண்ணெய்யை தடவி இந்த கலவையை அதில் சூடாக இருக்கும் போதே வைத்து நன்கு பரப்பி விட்டு அதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, மற்றும் முந்திரியை போடவும். சில நிமிடங்களுக்கு பின் அதனை துண்டு துண்டுகளாக பகிர்ந்து வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து சுவையான சோன் பப்டி தயார். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் தித்திக்கும் தீபாவளி சோன் பப்டியை கொடுத்து மகிழுங்கள்.
டாபிக்ஸ்