Chicken Tikka: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் டிக்கா இனி வீட்டிலேயே செய்யலாம்! பக்கா ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chicken Tikka: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் டிக்கா இனி வீட்டிலேயே செய்யலாம்! பக்கா ரெசிபி இதோ!

Chicken Tikka: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் டிக்கா இனி வீட்டிலேயே செய்யலாம்! பக்கா ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil
Oct 01, 2024 02:36 PM IST

Chicken Tikka: ஹோட்டல்களுக்கு சென்றாலே பெரும்பான்மையனோர் சிக்கன் ரெசிபி உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடுவர். அதற்கு காரணம் சிக்கனில் அதிக சுவை மிகுந்த உணவு வகைகள் தயாரிக்கப்படுவதே ஆகும்.

Chicken Tikka: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் டிக்கா இனி வீட்டிலேயே செய்யலாம்! பக்கா ரெசிபி இதோ!
Chicken Tikka: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் டிக்கா இனி வீட்டிலேயே செய்யலாம்! பக்கா ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்

அரை கிலோ போன்லெஸ் சிக்கன்

2 பெரிய வெங்காயம்

ஒரு பச்சை குடை மிளகாய்

ஒரு மஞ்சள் குடை மிளகாய்

ஒரு கேரட்

ஒரு வெள்ளரிக்காய்

ஒரு எலுமிச்சை பழம்

2 பல் பூண்டு

சிறிதளவு இஞ்சி

ஒரு பாக்கெட் தயிர்

ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய்

ஒரு டேபிள் ஸ்பூன் சீரக தூள்

ஒரு டேபிள் ஸ்பூன் கரம் மசாலா

அரை டேபிள் ஸ்பூன் மிளகு தூள்

சிறிதளவு மல்லி தூள்

சிறிதளவு மஞ்சள் தூள்

தேவையான அளவு மிளகாய் தூள்

தேவையான அளவு உப்பு

செய்முறை

முதலில் சிக்கனை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அந்த சிக்கன் துண்டுகளுக்கு ஏற்றவாறு வெங்காயம், குடை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், சீரக தூள், மல்லி தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கலக்கவும். இந்த கலவையில் வெட்டி வைத்திருந்த சிக்கன் துண்டுகளை போட்டு கிளறவும். பின்னர் குடை மிளகாய், வெங்காயாயத்தை போட்டு கிளறவும். 

இந்த கலவையை இறுக்கமாக மூடி ஃபிரிஜ்ஜிற்குள் சில மணி நேரங்கள் வைக்க வேண்டும். பிறகு ஒரு சிறிய இரும்பு கம்பியை எடுத்து அதில் ஒரு சிக்கன் துண்டு, ஒரு வெங்காயம், பின்பு இரு குடை மிளகாய் என வரிசையாக சொருக வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் சிறிதளவு வெண்ணெயை ஊற்றி அதை உருக விடவும். வெண்ணெய் உருகியதும் அதில் நாம் சிக்கன் துண்டுகளை சொருகி வைத்திருக்கும் இரும்பு கம்பியை எடுத்து அதில் வைத்து கொள்ளவும்.

இந்த கம்பியை சுழற்றி வைத்து சிக்கனின் அனைத்து பக்கதையும் நன்றாக வேக விட வேண்டும். இதனை அவனில் வைத்தும் வேக வைக்கலாம். பின்பு இதை ஒரு தட்டில் வைத்து அதனுடன் சிறிது கேரட், வெங்காயம், மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளை நறுக்கி வைத்து சுட சுட பரிமாறவும். இப்பொழுது சூடான மற்றும் சுவையான சிக்கன் டிக்கா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் இந்த ரெசிபி இருப்பதால் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இதனை அடிக்கடி செய்து தனது வீட்டில் உள்ளவர்களை குஷி படுத்துங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.