Neem Flower: வயிறு பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கும் வேப்பம்பூ பொரியல் செய்வது எப்படி?-how to prepare neem flower side dish for lunch - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Neem Flower: வயிறு பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கும் வேப்பம்பூ பொரியல் செய்வது எப்படி?

Neem Flower: வயிறு பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கும் வேப்பம்பூ பொரியல் செய்வது எப்படி?

Suguna Devi P HT Tamil
Sep 21, 2024 01:43 PM IST

Neem Flower: வேப்பம் மரத்தின் இலை முதல் காய் வரை அனைத்துமே பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது தமிழர்கள் மருத்துவத்திலும் குறிப்பிடப்பட்ட ஒரு முக்கிய மருந்தாகும். இத்தகைய வேப்பம் மரத்தில் இருந்து வரும் வேப்பம்பூவில் பல நல்ல பண்புகள் உள்ளன.

Neem Flower: வயிறு பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கும் வேப்பம்பூ பொரியல் செய்வது எப்படி?
Neem Flower: வயிறு பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கும் வேப்பம்பூ பொரியல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப் வேப்பம்பூ ஒரு கப்
  2. 6 அல்லது 8 சின்ன வெங்காயம் 
  3. தேவையான அளவு மிளகாய் தூள் 
  4. சிறிதளவு மஞ்சள் தூள்
  5. தேவையான அளவு உப்பு
  6. சிறிதளவு வெள்ளம்
  7. அரை முடி துருவிய தேங்காய் 
  8. சிறிதளவு கடுகு உளுத்தம் பருப்பு சிறிதளவு
  9. 4 அல்லது 5 வரமிளகாய் 
  10. சிறிதளவு கருவேப்பிலை
  11. வதக்க தேவையான கடுகு, உளுந்தப் பருப்பு  

செய்முறை 

முதலில் வேப்பம்பூவை தண்ணீரில் நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய்  ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு போட்டு பொரிய விட வேண்டும். பின்னர் வர மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு வதக்க வேண்டும். இறுதியாக வேப்பம்பூ சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கிளறி விட வேண்டும்.  அதனுடன் வெல்லம் சிறிதளவு சேர்த்து கிளறிவிடவும். அடுப்பில் இறக்கும் முன்பு அதனுடன் துருவிய தேங்காயையும் சேர்த்துக் கொள்ளவும்.  இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வேப்பம்பூ பொரியல் ரெடி. மதிய உணவுக்கும், காலை உணவுக்கும் பொரியலாக வைத்து சுவையாக சாப்பிடலாம். 

வேப்பம்பூ நன்மைகள் 

வேப்பம்பூவில் உள்ள சத்துக்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து  உடல் பருமனை குறைக்கும். உடலை சீராக வைக்க உதவுகிறது. மேலும் வாயுத்தொல்லை, ஏப்பம், பசியின்மை ஆகிய குறைபாடுகள் வேப்பம்பூ சாப்பிட்டு வார குணமடையும். 

பித்தத்தைக் குறைக்கவும், சளியைக் கட்டுப்படுத்தவும், குடல் புழுக்களை குறைக்கவும் இது பயன்படுகிறது. பல் சொத்தை, வயிறுகளில் உள்ள பூச்சிகளை குறைக்கவும், அல்சர், சொரியாசிஸ், காய்ச்சல், வயிற்றுக்கோளாறு, சுவாச பிரச்சனை, மலேரியா, ஒட்டுண்ணி நோய்கள், தோல் நோய்கள், இருதய நோய், நீரிழிவு நோய் மற்றும் இன்னும் பல நோய்களுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக் குறிப்புக்களை பின்பற்றி பயன் பெறுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.