Mutton Soup: சளியை போக்கும் நெஞ்சு எலும்பு சூப்! கம கமக்கும் ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mutton Soup: சளியை போக்கும் நெஞ்சு எலும்பு சூப்! கம கமக்கும் ரெசிபி இதோ!

Mutton Soup: சளியை போக்கும் நெஞ்சு எலும்பு சூப்! கம கமக்கும் ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil
Published Sep 30, 2024 09:41 AM IST

Mutton Soup: கிராமப் பகுதிகளில் உடலுக்கு ஏற்படும் சிறு தொல்லைகளை போக்க சாப்பிடும் உணவிலேயே மருந்தை வைத்து செய்வார்கள். இதுவே முன் காலத்தில் உணவை மருந்து என வழங்கப்பட்டது.

Mutton Soup: சளியை போக்கும் நெஞ்சு எலும்பு சூப்! கம கமக்கும் ரெசிபி இதோ!
Mutton Soup: சளியை போக்கும் நெஞ்சு எலும்பு சூப்! கம கமக்கும் ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்

கால் கிலோ நெஞ்செலும்பு கறி

250 கிராம் சின்ன வெங்காயம்

ஒரு தக்காளி

5 பல் பூண்டு

4 கிராம்பு

சிறிதளவு மஞ்சள் தூள்

சிறிதளவு சோம்பு

சிறிதளவு சீரகம்

சிறிதளவு மிளகு

சிறிதளவு மல்லித்ததூள் 

சிறிதளவு பட்டை

1 பிரியாணி இலை

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்

சிறிதளவு கறிவேப்பிலை

சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

முதலில் தக்காளி, ஸ்பிரிங் ஆனியன், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, வெங்காயம் மற்றும் பூண்டை தட்டி வைத்து, மட்டன் நெஞ்சு எலும்பு கறியை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். பின்பு ஒரு மிக்ஸியில் மிளகு,  மல்லித்தூள், சீரகத்தை போட்டு அதை நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் கிராம்பு, பட்டை, சோம்பு, மற்றும் பிரியாணி இலையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்க வேண்டும். அரை நிமிடத்திற்கு பிறகு அதில் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் மட்டன் நெஞ்செலும்பு கறியை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்க வேண்டும்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் தட்டி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும். 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, மஞ்சள் தூள், நாம் அரைத்து வைத்திருக்கும் மிளகு மசாலாவிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன்  றிவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட வேண்டும். பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு அதை சுமார் 10 விசில் வரும் வரை வேக விடவும்.  10 விசில் வந்ததும் குக்கரின் மூடியை திறந்து மட்டன் நெஞ்செலும்பு சூப்பை ஒரு கிளறு கிளறி அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் ஸ்பிரிங் ஆனியனை தூவி அதை எடுத்து ஒரு கின்னத்தில் ஊற்றி சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது சூடான மற்றும் உடம்பிற்கு மிகவும் சத்தான மட்டன் நெஞ்செலும்பு சூப் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். இது உடலின் சளி தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.