மதுரை ஸ்பெஷல் முட்டை கொத்து பரோட்டா! இனி வீட்டிலேயே செய்யலாம்! ஈசியான ரெசிபி!
மதுரையின் ஸ்பெஷல் உணவுகளில் ஒன்றான முட்டை கொத்து பரோட்டா மற்றும் அதற்கு சிக்கன் சால்னா மிகவும் சுவையானதாக இருக்கும். இந்த முட்டை கொத்து பரோட்டாவை செய்யும் எளிய முறையை இங்கு காணாலம்.
மதுரை என்றாலே உணவுகளின் நகரம் எனக் கூறலாம். அந்த அளவிற்கு பல்வேறு வகையான உணவுகள் அங்கு கிடைக்கும். ஏழை மக்களுக்கான ஹோட்டல்கள் முதல் பெரும் வசதி படைத்தவர்களுக்கான 5 ஸ்டார் ஹோட்டல்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற உணவுகள் கிடைக்கும். மதுரையின் ஸ்பெஷல் உணவுகளில் ஒன்றான முட்டை கொத்து பரோட்டா மற்றும் அதற்கு சிக்கன் சால்னா மிகவும் சுவையானதாக இருக்கும். இந்த முட்டை கொத்து பரோட்டாவை செய்யும் எளிய முறையை இங்கு காணாலம்.
தேவையான பொருட்கள்
3 பரோட்டா
அரை கிலோ சிக்கன் எலும்பு
4 முட்டை
4 பெரிய வெங்காயம்
4 தக்காளி
2 பச்சை மிளகாய்
6 பூண்டு பல்
1 இஞ்சி துண்டு
அரை கப் துருவிய தேங்காய்
1 பட்டை துண்டு
2 ஏலக்காய்
3 கிராம்பு
2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை
1 டேபிள்ஸ்பூன் மிளகு
1 டேபிள்ஸ்பூன் சோம்பு
1 டேபிள்ஸ்பூன் சீரகம்
1 டேபிள்ஸ்பூன் கசகசா
2 பிரியாணி இலை
அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்
1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்
1 டேபிள்ஸ்பூன் மிளகு தூள்
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு கருவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
முதலில் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு எண்ணெய் ஊற்றி அதை சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் ஒரு துண்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, 2 மேஜைக்கரண்டி சோம்பு, சீரகம், கசகசா, மற்றும் பொட்டுக்கடலையை போட்டு அதை நன்கு வறுக்கவும். அடுத்து அதில் துருவிய தேங்காயை போட்டு அதை வறுக்கவும். தேங்காய் வறுபட்டதும் சிறிது நேரம் ஆறிய பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் மற்றொரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் ஒரு துண்டு பட்டை, பிரியாணி இலை, மற்றும் ஒரு மேஜைக்கரண்டி சோம்பை சேர்த்து அதை வறுக்கவும். பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.இப்பொழுது அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், மற்றும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். பின்பு அதில்நறுக்கிய தக்காளியை போட்டு தக்காளி வதங்கியவுடன் அதில் சுத்தம் செய்த சிக்கன் எலும்பு சேர்த்து அது நன்கு மசாலாவுடன் சேருமாறு அதை நன்கு கிளறி விடவும்.
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மூடி போட்டு சிக்கன் எலும்பு நன்கு வேக வைத்து கொள்ளவும். பின்பு கடையில் பின் பரோட்டாவை எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து கொள்ளவும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதை சூடாக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு கறிவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு வதக்கவும். பின்பு அதில் நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் கடாயின் நடுவே எண்ணெய் ஊற்றி அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து விட்டு அதை தக்காளியுடன் சேர்த்து கிளறி விடவும். பின்னர் அதில் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் பரோட்டாவை போட்டு நன்கு கிளறி விடவும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து செய்து வைத்திருக்கும் சிக்கன் சால்னாவுடன் அதை சுட சுட பரிமாறவும்.
டாபிக்ஸ்