Brinjal Polichathu: கத்திரிக்காயில் கேரளா ஸ்டைல் பொலிச்சது ரெஸிபி! எப்படி செய்வது?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Brinjal Polichathu: கத்திரிக்காயில் கேரளா ஸ்டைல் பொலிச்சது ரெஸிபி! எப்படி செய்வது?

Brinjal Polichathu: கத்திரிக்காயில் கேரளா ஸ்டைல் பொலிச்சது ரெஸிபி! எப்படி செய்வது?

Suguna Devi P HT Tamil
Sep 25, 2024 04:46 PM IST

Brinjal Polichathu: கேரளம் மாநிலம் பல விஷயங்களுக்கு பெயர் போனது. இருப்பினூ அம்மாநிலத்தின் உணவு வகைகள் மிகவும் ருஷியானதாக இருக்கும். இதத்தகைய ருசி மிக்க ரெசிபிகளில் ஒன்று தான் பொலிச்சது.

Brinjal Polichathu: கத்திரிக்காயில் கேரளா ஸ்டைல் பொலிச்சது ரெஸிபி! எப்படி செய்வது?
Brinjal Polichathu: கத்திரிக்காயில் கேரளா ஸ்டைல் பொலிச்சது ரெஸிபி! எப்படி செய்வது?

இதில் வித்தியாசமாக கத்தரிக்காயை வைத்து இந்த பொலிச்சது எப்படி செய்யலாம் என்பதை இங்கு பார்ப்போம். மேலும் இதனை சுவையான ஈஸியான வழிகளில் செய்து உங்கள் வீடுகளில் உள்ளவர்களுக்கு தந்து அசத்துங்கள். 

தேவையான பொருட்கள் 

2 பெரிய கத்தரிக்காய்

2 தக்காளி

2 பெரிய வெங்காயம் 

4 பச்சை மிளகாய் 

சிறிதளவு கறிவேப்பிலை 

சிறிதளவு கொத்தமல்லி 

1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 

1 டீஸ்பூன் மிளகு தூள் 

1 டீஸ்பூன் மிளகாய் தூள் 

1 டீஸ்பூன் கரம் மசாலா 

1 டீஸ்பூன் மல்லி தூள் 

சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் 

2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் 

தேவையான அளவு தேங்காய் எண்ணெய்

தேவையான அளவு உப்பு 

ஒரு வாழை இலை 

செய்முறை 

முதலில் கத்தரிக்காயை வட்ட வடிவில் மெல்லியதாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடி பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தட்டில் குழம்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலந்த எடுத்துக் கொள்ள வேண்டும். வட்ட வடிவமாக வெட்டிய கத்தரிக்காயை அந்த மசாலாவில் போட்டு பிரட்டி  எடுத்துக் கொள்ள வேண்டும். கத்தரிக்ககாயின் இரு பக்கமும் மசாலா நன்கு ஒட்டுமாறு பிரட்ட வேண்டும். 

ஒரு தோசை சட்டியை அடுப்பில் வைத்து மிதமான தீயில், தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும். மசாலாவில் பிரட்டிய கத்திரிக்காயை இந்த சட்டியில் வைத்து 5 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்க வேண்டும். 

வெங்காயம் நன்கு வதக்கிய பின் நறுக்கி வைத்திருந்த தக்காளி, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் என அனைத்தையும் போட வேண்டும். சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி விடவும்.  பின்னர் ஒரு வாழை இலையை தீயில் சுட்டு எண்ணெய் தடவி முதலில் மசாலா அதன் மேல் கத்தரிக்காய் மீண்டும் அதிகன் மேல் மசாலாவை வைக்க வேண்டும். வாழை இலையை நன்கு கட்டி ஒரு சட்டியில் வைத்து 5 முதல் 6 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும். 

சுவையான சூடான கத்திரிக்காய் பொலிச்சது தயார். சூடான சாதம், இட்லி என அனைத்து வகை உணவுகளுக்கும் இது சிறப்பாக இருக்கும்.    

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.