Karaikudi Prawn Masala: கம கமக்கும் காரைக்குடி இறால் மசாலா குழம்பு! இது தெரிஞ்சா போதும்!
Karaikudi Prawn Masala:தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வித உணவு பிரபலமான ஒன்றாகும். அந்த வரிசையில் செட்டிநாடு சமையலுக்கு பெயர் போன காரைக்குடி ரெஸிபி மிகவும் அசத்தலான ஒன்றாகும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வித உணவு பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் செட்டிநாடு சமையலுக்கு பெயர் போன காரைக்குடி ரெஸிபிகள் மிகவும் அசத்தலான ஒன்றாகும்.காரைக்குடி இறால் மசாலா என்பது செட்டிநாட்டு சமையலில் வரும் மற்றொரு சுவையான உணவாகும். இது அனைத்து கடல் உணவு பிரியர்களுக்கும் ஏற்ற ஒரு உணவாகும். இந்த செட்டிநாடு இறால் மசாலா தயாரிப்பது எளிது, மேலும் இறால்கள் செட்டிநாடு மசாலாவுடன் நன்றாக கலந்து அட்டகாசமான சுவையை தருகின்றன.
காரைக்குடி இறால் மசாலா குழம்பை சாப்பிடும் அனைவரையும் ரசித்து சாப்பிட வைக்கும்.சுடு சாதம், சப்பாத்தி, பரோட்டா, தோசை என எதனுடன் வேண்டுமானாலும் இந்த இறால் மசாலாவை வைத்து சாப்பிடலாம். இந்த இறால் மசாலா செய்யும் எளிமையான செயல் முறையை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ இறால், 2 தக்காளி, 2 பெரிய வெங்காயம், ஒரு துண்டு லவங்கப் பட்டை, 2 ஏலக்காய், சிறிதளவு கறிவேப்பிலை, 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம், 2 டீஸ்பூன் கருமிளகாய் விதைகள், கருப்பு மிளகு சிறிதளவு, அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவையும் தேவையான அளவு எண்ணெய், தேர்வையான அளவு உப்பு ஆகியவையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன அளவில் 5 பேர் உள்ள குடும்பத்தினருக்கு ஏற்ற இறால் மசாலா குழம்பு செய்ய முடியும். மேலும் இதனை தயார் செய்ய 30 இல் இருந்து 40 நிமிடங்கள் வரை ஆகலாம். செய்யும் அளவுக்கு ஏற்றவாறு பொருட்களை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம்.
செய்முறை
அரை கிலோ இறால்களை தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்.(இறாலை நன்கு சுத்தம் செய்யத் தெரிந்தவர்கள் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும், ஏனெனில் இறால் உள்ளே பல தேவையற்ற உறுப்புகள் இருக்கலாம். அது பாதிப்பை உண்டாக்கலாம்.) அதன் பின்னர் பெருஞ்சீரகம் சிறிதளவு, கருப்பு மிளகு, சீரகம், சிவப்பு மிளகாய் மற்றும் கொத்தமல்லி விதைகளை ஒரு கடாயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் அவற்றில் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக விழுதாக வரும்வரை அரைக்கவும். மசாலாவுடன் மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறவும். அதை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெயை விட்டு சூடான பின், அதில் இலவங்கப்பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை சிறு தீயில் வதக்கவும். தக்காளியை நண்டு நைசாக அரைத்து அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பில் மிதமான வெப்பத்தில் 10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். மசாலாவிலிருந்து எண்ணெய் தனியாக பிரிந்து வர ஆரம்பித்தவுடன், புதிதாக அரைத்த செட்டிநாடு விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக சுத்தம் செய்யப்பட்ட இறால் மற்றும் உப்பை மசாலாவில் சேர்க்கவும். இறாலை மிதமான தீயில் 10 முதல்15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். சூடான சாதம் அல்லது பரோட்டாவுடன் பரிமாறவும்
டாபிக்ஸ்