தாறு மாறு தக்காளி ஊறுகாய்!இனி வீட்டிலேயே செய்து வைக்கலாம்! ரொம்ப ஈசி தான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தாறு மாறு தக்காளி ஊறுகாய்!இனி வீட்டிலேயே செய்து வைக்கலாம்! ரொம்ப ஈசி தான்!

தாறு மாறு தக்காளி ஊறுகாய்!இனி வீட்டிலேயே செய்து வைக்கலாம்! ரொம்ப ஈசி தான்!

Suguna Devi P HT Tamil
Nov 14, 2024 02:48 PM IST

தமிழ்நாட்டின் அனைத்து உணவுகளுடனும் சாப்பிடும் ஒரு சிறப்பான சைட்டிஷ் தான் ஊறுகாய், இந்த ஊறுகாய் இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிட்டு விடலாம்.

தாறு மாறு தக்காளி ஊறுகாய்!இனி வீட்டிலேயே செய்து வைக்கலாம்! ரொம்ப ஈசி தான்!
தாறு மாறு தக்காளி ஊறுகாய்!இனி வீட்டிலேயே செய்து வைக்கலாம்! ரொம்ப ஈசி தான்! (Youtube)

தேவையான பொருட்கள்

ஒரு கிலோ தக்காளி 

300 மில்லி லிட்டர் எண்ணெய் 

சிறிதளவு புளி 

2 டீஸ்பூன் வெந்தயம்

2 டீஸ்பூன் கடுகு 

2 டீஸ்பூன் சீரகம் 

8 பெரிய சைஸ் பூண்டு 

கறிவேப்பிலை

2 டீஸ்பூன் கடலை பருப்பு

2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு 

2 டீஸ்பூன் கடுகு

1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 

2 வற மிளகாய் -

கறிவேப்பிலை

தேவையான அளவு தண்ணீர்

தேவையான அளவு உப்பு

2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

2 டீஸ்பூன் மிளகாய் தூள்

செய்முறை:

முதல் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடாக்கி அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். பின்னர் எண்ணெய் சூடானதும் கடாயில் தக்காளி, புளி துண்டுகள் சேர்த்து வதக்கவும். பின் அதில் கல் உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். இதனை ஒரு 15 நிமிடங்கள் வேகவைக்கவும். மேலும் ஒரு கடாயை சூடாக்கி அதில் வெந்தயம், கடுகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். இவை ஓரளவு வறுபட்டதும் அதில் பூண்டு பற்கள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இவை அனைத்தையும் நன்கு வறுத்து பின்னர் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து ஆற  வைக்க வேண்டும்.  இவை அனைத்தும் ஆறிய பின்னர் ஒரு  மிக்சியில் போட்டு விழுதாக வருமாறு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  மேலும் வறுத்து வைத்திருந்த மசாலா பொருட்களையும் ஒரு ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

இப்பொழுது மீண்டும் கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, பெருங்காயம், சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். சற்று வறுபட்டதும் அடுப்பை அணைத்துவிட்டு தக்காளி விழுது சேர்க்கவும். இப்போது அடுப்பை பற்ற வைத்து நன்றாக வேகவைக்கவும். மேலும் தேவையான அளவு  தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக எண்ணெய் சேர்த்து 20 நிமிடங்கள் வேக விடவும். நன்றாக வெந்த பின் அதனை ஆர வைக்க வேண்டும். ஆறிய பின் இதனை ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் ஜாடியில் அடைத்துக் வைத்துக் கொள்ளுங்கள். சுவையான தக்காளி ஊறுகாய் தயார்.இதனை நீங்களும் செய்து பார்த்து மகிழுங்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.