Chili Powder: சிக்கன் குழம்புக்கு நம்ம அரைத்த மிளகாய் தூள் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.. எப்படி செய்வது?
சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்புக்கு பயன்படுத்தும் மிளகாய் தூள் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

மிளகாய் தூள்
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி விதை - 1 கிலோ
காய்ந்த மிளகாய் - 300 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
மிளகு - 100 கிராம்
சீரகம் - 100 கிராம்
வெந்தயம் - 50 கிராம்
மஞ்சள் - 50 கிராம்
செய்முறை
முதலில் கொத்தமல்லி விதை - 1 கிலோ, காய்ந்த மிளகாய் - 300 கிராம், துவரம் பருப்பு - 100 கிராம், கடலை பருப்பு - 100 கிராம். மிளகு - 100 கிராம், சீரகம் - 100 கிராம், வெந்தயம் - 50 கிராம், மஞ்சள் - 50 கிராம் எடுத்து கொள்ளுங்கள். 1-2 நாட்கள் வெயிலில் காய வைக்கவும்.
நன்கு காய்ந்த பிறகு அரிசி ஆலையில் பொடியாக அரைக்கவும்.
ஒரு மணி நேரம் ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும்.
இந்த மிளகாய் பொடியை சாம்பார், அனைத்து வகையான கறிகளிலும், சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு போன்றவற்றிலும் பயன்படுத்தலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்