அதிரி புதிரி சுவையில் புரோக்கலி சீஸ் பால்ஸ்!எளிமையாக செய்வது எப்படி?பக்கா ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அதிரி புதிரி சுவையில் புரோக்கலி சீஸ் பால்ஸ்!எளிமையாக செய்வது எப்படி?பக்கா ரெசிபி இதோ!

அதிரி புதிரி சுவையில் புரோக்கலி சீஸ் பால்ஸ்!எளிமையாக செய்வது எப்படி?பக்கா ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil
Nov 02, 2024 11:57 AM IST

புரோக்கலி ஒரு வகையான காய்கறி ஆகும். பல சத்துக்களைக் கொண்டுள்ள புரோக்கலியை வைத்து வீட்டிலேயே சுவையான சீஸ் பால்களை செய்ய முடியும். அதனை செய்யும் எளிய செய்முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

அதிரி புதிரி சுவையில் புரோக்கலி சீஸ் பால்ஸ்!எளிமையாக செய்வது எப்படி?பக்கா ரெசிபி இதோ!
அதிரி புதிரி சுவையில் புரோக்கலி சீஸ் பால்ஸ்!எளிமையாக செய்வது எப்படி?பக்கா ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்

2 பெரிய புரோக்கலி

4 உருளைக்கிழங்கு

கால் கிலோ பெரிய வெங்காயம்

3 பச்சை மிளகாய்

2 பல் பூண்டு

2 டீஸ்பூன் சோள மாவு

1 கப் பிரட் கிரம்ஸ்

1 டீஸ்பூன் ரெட் சில்லி ஃப்ளெக்ஸ்

1 டீஸ்பூன் மிளகு தூள்

1 டீஸ்பூன் இத்தாலியன் சீசனிங்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு சீஸ் க்யூப்ஸ்

தேவையான அளவு கொத்தமல்லி

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

முதலில் உருளைக்கிழங்குகளை வேக வைத்து அதை நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புரோக்கலி, வெங்காயம் பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கில் நறுக்கிய  புரோக்கலி, வெங்காயம் பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் கொத்தமல்லியை போட்டு நன்கு கிளறி விடவும். பின்பு அதில் சோள மாவு, ரெட் சில்லி ஃப்ளெக்ஸ், மிளகு தூள், இத்தாலியன் சீசனிங், மற்றும் உப்பை சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்பொழுது அதில் 2 tsp பிரட் கிரம்ஸ்ஸை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

அடுத்து கைகளில் எண்ணெய்யை தடவிக் கொண்டு இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பின்பு அதை தட்டி, நடுவில் குழியை ஏற்படுத்தி அதில் ஒரு சீஸ் க்யூப்பை வைத்து நன்கு பேக் செய்யவும். பின்பு இந்த உருண்டைகளை பிரட் கிரம்ஸ்ஸில் உருட்டி எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். இவ்வாறு வைத்திருக்கும் அனைத்து உருண்டைகளையும் பிடித்து வைத்த பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இதை பொரித்து எடுக்க தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி அதை சூடாக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு அது பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்கவும். இவை அனைத்தையும் வறுத்தெடுக்கும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும். அதிகமாக வைத்து கருக்கி விடக் கூடாது. 

இவை அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இதனை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார். பெரியவர்களும் இதனை சாப்பிடலாம். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.