அவல் இருந்தா போதும்! ஐந்தே நிமிடத்தில் அற்புதமான லட்டு செய்யலாம்! ஈசி ரெசிபி!
பல வகை லட்டுகள் உள்ளன. நாம் வீட்டிலேயே எளிமையான முறையில் லட்டு செய்யலாம். அதில் ஒன்று தான் அவல் லட்டு. இதனை செய்யும் எளிமையான முறையை இங்கு காண்போம்.
வீட்டில் விஷேசம் என்றாலே இனிப்பு பலகாரங்கள் தான் செய்வது உண்டு. மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கு இனிப்பு பலகாரங்களே பயன்படுகின்றன. எதேனும் திருவிழா என்றாலும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் என்றாலும் வீட்டில் இனிப்பு பலகாரம் செய்வது வழக்கமாகி விட்டது. இந்த நிலையில் இந்தியா போன்ற நாடுகளில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இனிப்பு உணவு பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. இதில் ஒன்று தான் லட்டு. பல வகை லட்டுகள் உள்ளன. நாம் வீட்டிலேயே எளிமையான முறையில் லட்டு செய்யலாம். அதில் ஒன்று தான் அவல் லட்டு. இதனை செய்யும் எளிமையான முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
1 கப் அவல்
அரை கப் வேர்க்கடலை
கால் கப் பொட்டு கடலை
250 கிராம் நெய்
20 முந்திரி
20 உலர் திராட்சை
தேவையான அளவவு தண்ணீர்
அரை கிலோ வெல்லம்
அரை முடி துருவிய தேங்காய்
2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
செய்முறை
முதலில் கடாயை அடுப்பில்ல வைத்து மிதமான சூட்டில் வேர்க்கடலையை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இதன் நிறம் மாறியதும் பொட்டு கடலை சேர்த்து வறுக்க வேண்டும். இதனை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது அவல் சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுக்க வேண்டும். இவை அனைத்தையும் கருக விடாமல் வறுக்க வேண்டும். நன்றாக வருத்த பின் இதனை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். சூடானதும் அதில் முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து வறுத்து பொன்னிறம் ஆனதும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வெல்லப்பாகு செய்ய வேண்டும். இதற்கு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்த பின்னர் வெல்லம் சேர்த்து வெல்லம் உருகியதும் அடுப்பை அணைத்து தனியாக வைக்கவும்.
பின்னர் வறுத்த அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெல்ல பாகு, துருவிய தேங்காய், வேர்க்கடலை அவல் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை நன்கு கலந்த பின்னர் வறுத்து வைத்திருந்த முந்திரி, உலர் திராட்சை மற்றும் இரண்டு மேசைக்கரண்டி நெய் சேர்க்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு கலவையை ஒரு தட்டில் வைத்து முழுமையாக ஆற வைக்கவும். கலவை ஆறிய பிறகு அதில் சிறிது எடுத்து லட்டுவாக பிடிக்கவும். சுவையான அவல் லட்டு தயார். இதில் சர்க்கரை குறைவாக வேண்டும் என்பவர்கள் குறைவாக கலந்து கொள்ளலாம். வீட்டில் எளிமையாக குறைவான நேரத்திலேயே இதனை செய்து கொடுக்க முடியும். வீட்டில் உள்ள சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நீங்களும் இதனை செய்து பார்த்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். இது நிச்சயமாக விழாக்கால ரெசிபியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
டாபிக்ஸ்