Red rice Aval Puttu : ஆடி விரத அம்மன் வழிபாட்டுக்கு, மணமணக்கும், மனம் மயக்கும் சிவப்பரிசி அவல் புட்டு!
Red Rice Aval Puttu : பின்னர் நேரடியாக சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து, தேங்காய், முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து சேர்த்து, ஏலக்காய் பொடி தூவி நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி வைத்து, பின்னர் திறந்தால், மணமணக்கும், மனம் மயக்கும் சிவப்பரிசி அவல் தயாராக இருக்கும்.
சிவப்பரிசியின் நன்மைகள் –
ஆந்தோசயனின் என்ற நிறமி இந்த அரிசி மற்றும் அவலின் சிவப்பு நிறத்துக்கு காரணமாகின்றன. சிலப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் சிறந்தது. காரணம் பட்டை தீட்டப்படாத அரிசியில் இருந்து இது தயார் செய்யப்படுவதால்தான். இவற்றை எடுத்துக்கொள்வதால், நீண்ட நேரத்திற்கு பசிக்காது, உடலை உறுதியாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், பசியை போக்கும், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும், உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, ஆரோக்கியமான உடல் எடையை பேண உதவுகிறது. எனவே எடைக்குறைப்பு பயணத்தில் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. ரத்த சோகை வராமல் பாதுகாக்கிறது. மூளை செல்களை புத்துணர்ச்சியாக்குகிறது. புற்றுநோயை உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும். வாய்ப்புண்ணை குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது.
தேவையான பொருட்கள் –
சிவப்பரிசி அவல் – 1 கப்
நெய் – 2 ஸ்பூன்
முந்திரி – 10
திராட்சை – 10
தேங்காய் – 1 கப்
ஏலக்காய் பொடி – ஒரு சிட்டிகை
வெல்லம் (அ) சர்ச்சரை (அ) நாட்டுச்சர்க்கரை – 1 கப் (உங்கள் தேவைக்கு ஏற்ப)
செய்முறை –
அடுப்பில் ஒரு வாணலியில் நெய்விட்டு சிவப்பரிசி அவலை நன்றாக வறுத்து ஆறவைக்க வேண்டும்.
ஆறியபின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ரவை பதத்துக்கு நன்றாக பொடித்து எடுத்து பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை பாகு காய்ச்சி சூடான பாகை பொடித்து வைத்துள்ள அவல் பொடியில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
மூடி வைத்து சிறிது நேரம் ஊறவிடவேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து, ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள அவலில் ஏலக்காயுடன் சேர்க்க வேண்டும்.
தேங்காயையும் தனியாக நெய் ஊற்றி வறுத்து சேர்க்க வேண்டும்.
நன்றாக கிளறிவிட்டால் சுவையான மற்றும் சத்தான காலை உணவு அவர் புட்டு தயார்.
சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து செய்ய விருப்பப்பட்டீர்கள் என்றால், வறுத்து பொடித்த அவலை இட்லி பாத்திரத்தில் வைத்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
பின்னர் நேரடியாக சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து, தேங்காய், முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து சேர்த்து, ஏலக்காய் பொடி தூவி நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி வைத்து, பின்னர் திறந்தால், மணமணக்கும், மனம் மயக்கும் சிவப்பரிசி அவல் தயாராக இருக்கும்.
டாபிக்ஸ்