அவுல் இருந்த போதும் அருமையான கொழுக்கட்டை செய்யலாம்! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!
அவல் கொழுக்கட்டை இந்த மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த உணவாக அமையும். எளிமையான முறையில் அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
மாலை நேரம் வந்தாலே சுட சுட டீயுடன் சாப்பிடல் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. வேலையில் இருந்து திரும்பி வருபவர்கள் மற்றும் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகள் என அனைவருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிட கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். எண்ணெயில் பொரிக்காத ஸ்நாக்ஸ் எப்போதும் ஒரு சிறந்த ஆரோக்கியமான ஒன்றாகும். அது போன்ற ஒரு ஸ்நாக்ஸ் தான் அவல் கொழுக்கட்டை. இதனை மாலை நேரத்தில் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அவல் கொழுக்கட்டை இந்த மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த உணவாக அமையும். எளிமையான முறையில் அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
2 கப் அவல் (250 மி.லி கப்)
2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு
1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 டேபிள்ஸ்பூன் கடுகு
1 டேபிள்ஸ்பூன் சீரகம்
ஒரு பெரிய வெங்காயம்
சிறிதளவு துண்டு இஞ்சி
2 பச்சை மிளகாய்
தேவையான அளவு உப்பு
அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
சிறிதளவு கறிவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி இலை
1 கப்துருவிய தேங்காய்
செய்முறை
முதலில் 2 கப் அவலை எடுத்து சுத்தமாக கழுவி அதனை குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இவை நன்கு வறுபட்டதும், அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் அதில் துருவிய தேங்காய் சேர்த்து, நன்கு கலந்து விட்டு கிளறி விட வேண்டும்.
இப்போது ஒரு பெரிய கிண்ணத்தில், ஊறவைத்த அவலை சேர்க்கவும். தாளித்த பொருட்கள் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்க வேண்டும். இதனை கொழுக்கட்டை மாவு பதத்தில் கலக்கி எடுத்துக் கொல்ல வேண்டும். இப்பொழுது கொழுக்கட்டை கலவையை பிடித்த வடிவில் உருட்டி எண்ணெய் தடவிய தட்டில் வைக்கவும். இப்போது தயார் செய்த உருண்டைகளை இட்லி குக்கரில் 10 நிமிடம் வேகவைக்கவும். வெந்தபின்பு மென்மையான அவல் கொழுக்கட்டை தயார். இதனை சுட சுட தட்டி வைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாற வேண்டும். இதனை அனைவரும் நன்றாக சாப்பிடுவார்கள். அவலை வைத்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இது போன்ற மாலை நேர சிற்றுண்டியை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் போது ஆரோக்கியமான உணவாக இருக்கும். எனவே இது மாதிரியான ஸ்நாக்ஸ் களை செய்து தர முயற்சி செய்யுங்கள். இதனை ட்ரை செய்வதற்கு அதிக செலவும் தேவையில்லை.
டாபிக்ஸ்