தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting: இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பதில் வரும் சவால்களை சமாளிப்பது எப்படி?

Parenting: இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பதில் வரும் சவால்களை சமாளிப்பது எப்படி?

I Jayachandran HT Tamil
Jun 18, 2023 11:46 PM IST

இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பதில் வரும் சவால்களை சமாளிப்பது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பதில் வரும் சவால்களை சமாளிப்பது எப்படி
இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பதில் வரும் சவால்களை சமாளிப்பது எப்படி

ட்ரெண்டிங் செய்திகள்

 

இரட்டை குழந்தைகளை ஒருங்கே சமாளிப்பது பல மடங்கு சவால்களாக இருக்கும். ஒரே நேரத்தில் ஒரு குழந்தைக்கு மேல் வளர்க்கும் நிலைக்கு தயாராவது கடினம் என்றாலும், இந்த நிலையை எதிர்பார்த்தால் முதலில் அமைதியாக யோசியுங்கள். கொஞ்சம் திட்டமிட்டால் நீங்கள் நல்ல முறையில் தயாராகலாம். இரட்டையர்கள் அல்லது மூன்று குழந்தைகள் வளர்வதை பார்ப்பது அவர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது அற்புதமானது.

காவல் ஆய்வாளராக இருந்த இந்திராவுக்கு இரட்டைக்குழந்தை பிறக்க இருப்பதை அறிந்தவுடன் அவரும், அவரது கணவரும் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.

இரட்டை குழந்தைகளை சீக்கரமே பிரசவம் பார்க்க வேண்டும். உங்கள் சுரப்பிகளும் உச்சத்தில் இருக்கும். இரட்டைக்குழந்தைகள் பிறந்தவுடன் தாய்க்குத் தூக்கமே இருக்காது. தொடக்க காலத்தில், பால் கொடுப்பது சவாலாக இருக்கும். ஒரு குழந்தைக்கு பால் கொடுத்த பின் இன்னொரு குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். ஒன்று மாற்றி ஒன்று பசியால் வீறிட்டுக் கொண்டே இருக்கும். இந்திராவுக்கு இது மிகவும் கஷ்டமாக இருந்தது. அவரது உதவிக்கு அம்மா உடன் இருந்தாலும் குழந்தைகளை கவனித்துக்கொள்வது சிரமமாகவே இருந்ததாகக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில். “எனக்கு ஆறு மாத கால பேறுகால விடுமுறை இருந்தது. இருந்தாலும் மேலும் இரண்டு மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டேன். ஒரு குழந்தைக்கு மேல் பாலூட்டி வளர்க்க வேண்டிய நிலைக்கு ஏற்ப அம்மா தன்னை உடல்ரீதியாக தயார் செய்து கொள்ள வேண்டும். தற்போது இந்தியாவில் பேறுகால விடுமுறை காலம் அதிகமாக்கப்பட்டுள்ளதால் இளம் அம்மாக்கள் தங்கள் குழந்தையும் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள அதிக நேரம் கிடைக்கிறது” என்கிறார் மகப்பேறு மருத்துவர் சுதாராணி.

ஒன்றுக்கு இரண்டு குழந்தைகளைப் பராமரிக்கும் புதிய பொறுப்புக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கும் போது ஒரு அம்மாவுக்கு மனநிலை மாற்றங்களும், உடல் ரீதியிலான சவால்களும் உண்டாகும். ஒரு குழந்தைக்கு மேல் இருக்கும் போது இது சிக்கல்தான். குடும்பத்தினரிடம் இருந்து உணர்வு நோக்கிலான, உடல்ரீதியிலான உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். இதில் குற்ற உணர்வு கொள்ள வேண்டிய அவசியமேயில்லை.

முதல் சில மாதங்களில் பயிற்சி பெற நர்ஸ்கள் அல்லது ஆயாக்கள் இருப்பது மிகவும் உதவியாக இருக்கும். நிதி விஷயங்கள், உதவி அமைப்புகள் மற்றும் பணி சார்ந்த பிரச்னைகளை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

குழந்தை பிறந்த பிறகு முதல் இரண்டு ஆண்டுகள் தான் உண்மையில் சவாலானது. சில நேரங்களில் வளர்ச்சி சார்ந்த பிரச்னைகள் உருவாகலாம் என்பதால் இரட்டையரை கவனிக்க அதிக கவனம் தேவை. இந்த நேரத்தில் தான் குழந்தைகள் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொள்வதோடு, சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டு, சுவையும் வளர்த்துக்கொள்கின்றனர்.பல நேரங்களில் புதிய நோய்த்தொற்றுகள் தானாகவே சரியாகிவிடக்கூடும். இதனால் நல்ல குழந்தை நல மருத்துவரை அறிந்து வைத்திருப்பது அவசியம்” என்கிறார் டாக்டர் சுதாராணி.

WhatsApp channel

டாபிக்ஸ்