Rava Burfi Recipe: குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் சுவையான ரவா பர்பி செய்வது எப்படி? ஈஸி ரெசிபி!
Rava Burfi Recipe:குழந்தைகள் பெரும்பாலும் ஸ்நாக்ஸ்சாப்பிடவே விரும்புவார்கள். அதிலும் இனிப்பு அதிகம்உள்ள உணவு பொருட்கள் என்றால் அதிகமாக சாப்பிடுவர். வீட்டிலயே அவர்கள் விரும்பும் ஸ்நாக்ஸ்களை செய்துதந்தால் சுத்தமனதாக இருக்கும்.
வீட்டில் இருக்கும் அனைவரும் இனிப்பு ஸ்நாக்ஸ் சாப்பிட மிகவும் ஆசைப்படுவார்கள். குழந்தைகள் பெரும்பாலும் ஸ்நாக்ஸ் சாப்பிடவே விரும்புவார்கள். அதிலும் இனிப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள் என்றால் அதிகமாக சாப்பிடுவர். வீட்டிலயே அவர்கள் விரும்பும் ஸ்நாக்ஸ்களை செய்து தந்தால் சுத்தமனதாக இருக்கும். இந்நிலையில் அவர்களுக்கான ஸ்நாக்ஸ்களை கடைகளில் சென்று வாங்கத் தேவை இல்லை. அப்படி வீட்டிலேயே எளிமையான முறையில் மணம் அள்ளும், சுவை துள்ளும் ரவா பர்பி செய்வது என்பதை பார்க்கலாம்.
90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பர்பி
அதி வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை பழைய பழக்க வழக்கமான நடமுறைகளையும் மாற்றி வருகிறது. அந்த வரிசையில் உணவுகளும் பல்வேறு விதமாக மாறியுள்ளது. குறிப்பாக 90’ஸ் கிட்ஸ் அவர்களது சிறு வயதில் சாப்பிட்ட ஸ்நாக்ஸ் முற்றிலும் மாறி விட்டது. ஆரஞ்சு மிட்டாய், பேப்பர் ரோஸ்ட், தேன் மிட்டாய், கடலை மிட்டாய் வரிசையில் இந்த ரவா பர்பி முக்கியமான ஒன்றாகும். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் விற்கப்படும் இந்த பர்பியை வாங்கி சப்பிடுவர்.
மேலும் இது போன்ற ஸ்நாக்ஸ் எப்போதும் வயிற்றுக்கு கெடுதல் ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் இதில் கெமிக்கல் பொருட்கள் எதுவும் சேர்க்கப் படுவதில்லை. இந்த நிலையில் தற்போது வரும் பல கண்கவரும் ஸ்நாக்ஸ்கள் பல உபாதைகளை உண்டு பண்ணுகின்றன. இப்போது உள்ள ஸ்நாக்ஸ் பொருட்களின் விலையும் எக்கசக்கமாக அதிகமாக உள்ளது. ஆனால் 90’ஸ் கிட்ஸ் கட்டத்தில் விற்கப்பட்ட அனைத்து ஸ்நாக்ஸ்களும் குறைந்த விலையிலும் சிறந்த சுவையிலும் இருக்கும். இந்த ரவா பர்பியை நீங்கள் சாப்பிடும் போது, நீங்கள் விரும்பு சுவையில் இருக்கும். இதை செய்யும் முறை மிக ஈஸியாக இருக்கும். உங்கள் வீடுகளில் செய்து அனைவரிடமும் ஷேர் செய்து, 90’ஸ் நினைவாகளையும் ஷேர் செய்து கொள்ளுங்கள்.
ரவா பர்பி செய்ய தேவையான பொருட்கள்
கால் கிலோ பாம்பே ரவா, 600 கிராம் சர்க்கரை ஆகிய பொருட்களை சரியான அளவில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரை முடி தேங்காய் துருவி எடுக்க வேண்டும். 250 கிராம் நெய், 1டேபிள் ஸ்பூன் ஏலக்காய் தூள், 2டீஸ்பூன் முந்திரி, கால் கப் தண்ணீர்.
செய்முறை
மிதமான தீயில் சிறிது நெய்யை ஒரு பாத்திரத்தில் சூடாக்கவும். அதில் முந்திரியை போட்டு லேசாக வறுத்து எடுக்க வேண்டும். பிறகு துருவிய தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும். அதனை அகற்றி ஒதுக்கி வைக்கவும். கடாயில் சிறிது நெய் சேர்த்து ரவையை பொன்னிறமாக வறுக்கவும். சர்க்கரையை தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும்.
பின்னர் 1 டம்ளர் பால் சேர்த்து மேலே எழும் கறையை நீக்கவும். கலவை ஒரு சரம் நிலைத்தன்மையை அடையும் வரை கொதிக்கவும். ரவா, தேங்காய், முந்திரி சேர்க்கவும். கெட்டியாகும் வரை, அவ்வப்போது சிறிது நெய் சேர்த்து நன்கு கிளறவும்.ஒரு தட்டில் ஊற்றி குளிர்விக்க தனியாக வைக்கவும். முழுவதுமாக ஆறிய முன், விரும்பிய வடிவில் நறுக்கவும். காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும். குழந்தைகள் விரும்பும் போது பரிமாறவும்.
டாபிக்ஸ்