தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Tasty Ragi Adai Dosa

Ragi Adai : உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடிய ராகி அடை.. இனி இப்படி செய்து பாருங்க.. செம ருசியா இருக்கும்!

Divya Sekar HT Tamil
Mar 01, 2024 02:56 PM IST

உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடிய ராகி அடை எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

ராகி அடை
ராகி அடை

ட்ரெண்டிங் செய்திகள்

அரிசி மாவு - 1 டீஸ்பூன்

இஞ்சி - 1 சிறிய துண்டு பொடியாக நறுக்கியது

பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது

வெங்காயம் - 1

எள் விதைகள் - 1 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

முருங்கை இலை - 1 கைப்பிடி

துருவிய தேங்காய் 2 டீஸ்பூன்

துருவிய கேரட் - 1

செய்முறை

உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடிய ராகி அடை எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். முதலில் ஒரு கப் ராகி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் சிறு துண்டுகளாக கட் செய்து வைத்த இஞ்சி பச்சை மிளகாய் சேர்க்கவும்.

பின்னர் அதில் நறுக்கி வைத்த வெங்காயம் ஒரு ஸ்பூன்,முருங்கை இலை 1 கைப்பிடி, தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன், கேரட் துருவல் ஒரு ஸ்பூன், வெள்ளை எள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். அதாவது இந்த மாவை நீங்கள் தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும்.

கையில் ஈரப்பதத்துடன் இந்த மாவை நீங்கள் பிசைந்தால் நன்கு கையில் ஒட்டாமல் வழவழப்பாக வரும். பின்னர் அடைக்கு ஏற்றவாறு மாவை பிசைந்த பிறகு அதனை ஒரு பிளாஸ்டிக் கவரிலோ அல்லது வாழை இலையிலோ வைத்து தட்டவும். இதனை தட்டும் போது கையில் தண்ணீர் நினைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் மாவை தட்டும் போது மாவு கையில் ஒட்டாது. பின்னர் சூடான தோசை சட்டியில் அந்த இலையோடு எடுத்து அடையை தோசை சட்டியில் போடவும். ஒரு இரண்டு நொடி சூடானதும் அந்த இலையை எடுக்கவும் அப்பொழுதுதான் இலை மாவோடு ஒட்டாமல் அழகாக வரும்.

இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் இந்த ராகி அடையை உடையாமல் எடுக்கலாம். ஆனால் இந்த ராகி அடையை வயதானவர்களால் சாப்பிட முடியாது. அவர்களுக்கு நீங்கள் ராகி மாவை தண்ணீர் ஊற்றி தோசை போல் ஊற்றிக் கொடுத்தால் அவர்களால் அதை சாப்பிட முடியும். அவர்களுக்கு நீங்கள் ராகி தோசையை இதே முறையை பயன்படுத்தி சுட்டுக் கொடுக்கலாம். இனி இந்த முறையை பயன்படுத்தி ராகி அடை செய்து சாப்பிடுங்கள்.

ராகியின் நன்மைகள்

கேழ்வரகில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. இது குளுக்கோஸ் உறிஞ்சுதலை மெதுவாக்கி,ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கிறது.

கேழ்வரகு தானியத்தில் வைட்டமின்கள் பி1, பி3, பி6 மற்றும் கால்சியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் ஒட்டுமொத்த உடல்நல ஆரோக்கியத்துக்கு ஆதரவளிக்கிறது. அத்துடன் நீரழிவு சம்மந்தமான சிக்கல்களை தடுக்கவும் அல்லது நிர்வகிக்கவும் உதவுகிறது.

இதில் இடம்பிடித்திருக்கும் நார்ச்சத்து பசி உணர்வை அடக்கி வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. உடல் எடையை நன்கு நிர்வகிக்க உதவுகிறது. நீரழிவு பாதிப்பு இருப்பவர்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்