Onion Garlic Skin Podi :இனி தூக்கி எறியாதீங்க.. வெங்காய பூண்டு தோலில் பொடி செய்யலாமா? இட்லி தோசைக்கு சுவையா இருக்கும்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Onion Garlic Skin Podi :இனி தூக்கி எறியாதீங்க.. வெங்காய பூண்டு தோலில் பொடி செய்யலாமா? இட்லி தோசைக்கு சுவையா இருக்கும்

Onion Garlic Skin Podi :இனி தூக்கி எறியாதீங்க.. வெங்காய பூண்டு தோலில் பொடி செய்யலாமா? இட்லி தோசைக்கு சுவையா இருக்கும்

Divya Sekar HT Tamil
Feb 16, 2024 11:44 AM IST

நாம் தேவையில்லை என்று தூக்கு எறியும் வெங்காயத்தோல் பூண்டு தோல் இதனை வைத்து ஒரு அருமையான சுவையான பொடி தயாரிக்கலாம். அது எப்படி தெரியுமா? இதில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வெங்காய பூண்டு தோல் பொடி
வெங்காய பூண்டு தோல் பொடி

பூண்டு தோல்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கள்ளப் பருப்பு - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

அசாஃபோடிடா

எள் விதைகள் - 1 டீஸ்பூன்

உப்பு

காய்ந்த சிவப்பு மிளகாய்

செய்முறை

நாம் தேவையில்லை என்று தூக்கு எறியும் வெங்காயத்தோல் பூண்டு தோல் இதனை வைத்து ஒரு அருமையான சுவையான பொடி தயாரிக்கலாம். அது எப்படி தெரியுமா? இதில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

இதனை இட்லி தோசை மேல் தூவி சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். ஒரு முறை சுவைத்து விட்டால் மறுமுறை கேட்கத் தோன்றும். அந்த அளவிற்கு இந்த பொடி மிகவும் சுவையாக இருக்கும்.

முதலில் ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும். அதே கடாயில் அதாவது கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு அதனுடன் இப்போது மிளகு, காய்ந்த மிளகாய், ஒரு கட்டி பெருங்காயம், ஒரு டீஸ்பூன் எள்ளு, உப்பு சேர்த்து நன்கு வறுக்கவும். இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி நன்கு ஆற வைக்கவும்.

இப்போது கிளீன் செய்து வைத்த வெங்காயத்தூள் பூண்டு தோலை ஒரு கடாயில் போட்டு நன்கு வறுக்கவும். இந்த வெங்காயம் பூண்டு தோல் சூடு ஏறியதும் அதை கையில் எடுத்து நீங்கள் நசுக்கினால் நன்கு பொறி போல நசுங்கும். மொறு மொறு என இருக்கும். இதுதான் கரெக்டான பதம் .(குறிப்பு இந்த வெங்காயத்தோலை நீங்கள் எடுத்து தண்ணீரில் போட்டு ஊறவைத்து பின் அதனை ஒரு நாள் முழுக்க காயவைத்து அதன் பிறகு நீங்கள் சமைப்பதற்கு எடுத்துக் கொள்ளலாம்)

இப்போது வறுத்து வைத்த கடலை பருப்பு உளுத்தம் பருப்பு அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்தவுடன் அதில் நீங்கள் வறுத்து வைத்த வெங்காயத்தோல் பூண்டு தோல் அதனையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு சுவையான பூண்டு வெங்காயத்தோல் பொடி ரெடி.

 இதனை நீங்கள் தோசை இட்லிவுடன் தூவி சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். எனவே இனிமேல் வீட்டில் வெங்காயத்தோல் பூண்டு தோல் இதனை தூக்கி எறியாமல் இந்த மாதிரி பயனுள்ளதாக மாற்றி சுவைத்து பாருங்கள் இனி நீங்கள் வெங்காய பூண்டு தோலை தூக்கி எறிய மாட்டீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.