Carrot Kesari : வாயில் வைத்த உடன் கரையும்.. செம டேஸ்டா கேரட் கேசரி செய்யலாமா? ரொம்ப ஈஸி தான்!
Carrot Kesari : இனிப்பு என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது கேசரிதான். அந்த கேசரியை கலர் எதுவும் சேர்க்காமல் கேரட்டை பயன்படுத்தி எப்படி செய்வது என்பதை குறித்து பார்க்கலாம்.
கேரட் கேசரி
தேவையான பொருட்கள்
ரவா 1 கப்
துருவிய கேரட் 1 கப்
கேரட் சாறு 3 & 1/2 கப்
சர்க்கரை 1&1/2 கப்
ஏலக்காய் தூள்
முந்திரி 10
உப்பு சிட்டிகை
செய்முறை
இனிப்பு என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது கேசரிதான். அந்த கேசரியை கலர் எதுவும் சேர்க்காமல் கேரட்டை பயன்படுத்தி எப்படி செய்வது என்பதை குறித்து பார்க்கலாம்.
கேரட் பயன்படுத்தி கேசரி செய்வது ஆரோக்கியமானதும் கூட சுவையான கேரட் கேசரி இந்த மாதிரி வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுங்கள். மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
முதலில் ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் ஊற்றி முந்திரியை போட்டு நன்கு வறுத்து எடுக்கவும். பின்னர் அதே கடாயில் ஒரு கப் ரவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை வறுத்தெடுத்து மீதி உள்ள நெயில் ரவையை போட்டு வறுத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மூன்று அரை கப் சாறு வரும் வரை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்
இப்போது ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் ஒரு கப் கேரட் துருவலை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். அரை கிலோ கேரட்டை நன்கு அரைத்து அதில் ரவை அளந்த கப்பில் மூன்று அரை கப் சாறு வரும் வரை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள் அந்த சாட்டை இப்பொழுது ஊற்றி கொதிக்க விடுங்கள்.
ரவை சீக்கிரம் வெந்துவிடும்
ஒரு கொதி வந்தவுடன் நாம் வறுத்து வைத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிண்டி விடுங்கள். சிம்மில் வைத்து நீங்கள் இந்த கேசரியை செய்யுங்கள். ஏனெனில் ரவை சீக்கிரம் வெந்துவிடும்.
நன்கு வெந்த பிறகு ரவை அளந்து அதே கப்பில் ஒன்றரை கப் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி விடுங்கள். ஒன்றாக சர்க்கரையை போட்டால் சர்க்கரை கெட்டி கெட்டியாக நின்று விடும். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரையை சேர்த்து நன்கு கிண்டி விடுங்கள்.
வாரம் ஒரு முறையாவது இந்த ஸ்வீட்டை செய்து கொடுங்கள்
இப்போது வறுத்து வைத்த முந்திரி, ஏலக்காய் பவுடர்,, ஒரு சிட்டிகை உப்பு, நெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி நன்கு கிண்டி விடுங்கள், நன்கு கொல கொலவென பதத்தில் இருக்கும் போது அடுப்பை அணைத்து பரிமாறுங்கள். இப்பொழுது உங்களுக்கு கேரட் கேசரி ரெடி. வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுங்கள் உடலுக்கும் ஆரோக்கியமானது அனைவரும் விரும்பியும் சாப்பிடுவார்கள் இந்த கேரட் கேசரி செய்வதும் மிகவும் எளிமை. எனவே வாரம் ஒரு முறையாவது இந்த ஸ்வீட்டை செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்