Coconut Sweet Boli: தித்திக்கும் தேங்காய் போளி செய்வது எப்படி? இனிப்பான செய்முறை இங்கே!
Coconut Sweet Boli: பொதுவாகவே இனிப்பு பண்டங்கள் பல குழந்தைகளுக்கு பிடிக்கும். பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவர். குறிப்பிடத்தக்க இனிப்பு பண்டமாக தேங்காய் போளி இருந்து வருகிறது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பல உணவு வகைகள் ஒரே உணவாக இருக்கும். அருகாமை மாநிலங்களாக இருப்பதால் ஒரே மாதிரியான உணவு முறைகள் உள்ளன. இரு மாநிலங்களிலும் அரிசியே பிரதான உணவாக இருந்து வருகிறது. தேங்காய் போளி பிரபல இனிப்பு பண்டமாக உள்ளது. பொதுவாகவே இனிப்பு பண்டங்கள் பல குழந்தைகளுக்கு பிடிக்கும். பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவர். குறிப்பிடத்தக்க இனிப்பு பண்டமாக தேங்காய் போளி இருந்து வருகிறது. சுவையான இந்த தேங்காய் போளியை நாமே வீட்டிலேயே செய்யலாம். இந்த ஈஸியான செயல்முறையை காணலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் மைதா மாவு
1 தேங்காய்
200 கிராம் வெல்லம்
சிறிதளவு ஏலக்காய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு நெய்
செய்முறை
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா மாவு, நல்லெண்ணெய் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைய வேண்டும். இந்த மாவை ஒரு மூடி போட்டு மூடி வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லம், தண்ணீர் சேர்த்து நன்கு கரையும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். பின் இந்த வெல்லக் கரைசலை ஆற விடவும். பின் ஒரு கடாயில் தேவையான அளவு நெய் சேர்த்து உருகியதும், அதில் துருவிய தேங்காய் போட்டு வதக்கவும். பின்னர் இதில் வடிகட்டி வைத்திருக்கும் வெல்லத்தை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதனுடன் ஏலக்காய் தூளை சேர்த்து மீண்டும் நன்கு கலந்து விட்டு அதில் இருக்கும் தண்ணீர் நன்கு வற்றும் வரை அதை வதக்கவும்.
இப்பொழுது ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். பின்பு ஒரு வாழை இலையை எடுத்து அதில் நன்கு எண்ணெய் தடவி நாம் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை அதில் வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் அதை தேய்க்கவும். பிறகு அதில் செய்து வைத்திருக்கும் தேங்காய் பூரணத்தில் இருந்து சிறிதளவு எடுத்து அதன் நடுவில் வைத்து அதை அனைத்து புறங்களிலும் இருந்து மடித்து அதை மீண்டும் உருண்டையாக உருட்டவும். அடுத்து அதை மீண்டும் சப்பாத்திக்கு தேய்ப்பது போல் அதை தேய்த்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
ஒரு தோசை சட்டியில் தேய்த்து வைத்திருக்கும் மாவை போட்டு எண்ணெய் ஊற்றி சுடவும். அது இரு புறம் வெந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான தேங்காய் போளி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.இது பெரும்பாலும் கடைகளில் விற்கப்படும் உணவாகவே இருந்து வருகிறது. நமது வீடுகளில் செய்யும் போது இதனை அனைவரும் கூடுதலாக விரும்பி சாப்பிடுவர். நெய் மற்றும் தேங்காய் சேர்த்து செய்வதால் சிறந்த சுவையுடன் இருக்கும்.
டாபிக்ஸ்