தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Sundaikai Kulambu And Arai Keerai Kootu

Healthy Recipe: வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் சுண்டைக்காய் குழம்பும் அரைக்கீரை கூட்டும்!

I Jayachandran HT Tamil
Jun 17, 2023 11:16 PM IST

வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் சுண்டைக்காய் குழம்பும் அரைக்கீரை கூட்டும் செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் சுண்டைக்காய் குழம்பும் அரைக்கீரை கூட்டும்
வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் சுண்டைக்காய் குழம்பும் அரைக்கீரை கூட்டும்

ட்ரெண்டிங் செய்திகள்

அரைக்கீரையில் நிறைந்த வைட்டமின்கள், தாதுச்சத்துகள் உள்ளன. 48 நாட்களுக்கு அரைக்கீரையை சமைத்து சாப்பிட்டால் கண்பார்வை தெளிவாகும். சிறுகுழந்தைகள், இளைய தலைமுறையினருக்கு ஏற்படும் கிட்டப்பார்வை பிரச்னை வராது.

சுண்டைக்காயை வைத்து குழம்பும், அரைக்கீரையை வைத்து கூட்டும் செய்து சாப்பிட்டால் செம காம்பினேஷனாக இருக்கும்.

சுண்டைக்காய் குழம்பு செய்யத் தேவையானபொருட்கள்:

சுண்டைக்காய் வத்தல் - ஒரு டேபிள்ஸ்பூன்

புளி - சிறு எலுமிச்சை அளவு

கடுகு - அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - சிறு துண்டு

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - 10 இலைகள்

உப்பு - தேவையான அளவு

சுண்டைக்காய் குழம்பு செய்முறை:

அடுப்பை ஏற்றி ஒரு வாணலியில் மிளகாய் வற்றல், தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்துப் பொடி செய்ய வேண்டும்.

மீதி எண்ணெயில் சுண்டைக்காய் வத்தலை சிவக்க வறுத்து எண்ணெயோடு அப்படியே வைக்க வேண்டும்.

புளிபேஸ்ட்டையும், உப்பையும் 2 கப் தண்ணீரில் கலந்து 2 கொதி வரும் வரையில் கொதிக்க வைக்க வேண்டும்.

பின் வறுத்த பொடியை போட்டு நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கடைசியில் வறுத்த சுண்டைக்காய் வற்றலையும், எண்ணெயுடன் கறிவேப்பிலையும் போட்டு சிறிது நேரம் கொதித்த பின்பு கடுகு தாளித்து இறக்க வேண்டும்.

கசப்புத் தெரியாமல் இருப்பதற்காக வெல்லம் வேண்டும் என்பவர்கள் சிறிது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

சுண்டைக்காய் குழம்புக்கான அரைக்கீரை பருப்பு கூட்டு செய்வது பற்றி பார்க்கலாம்

அரைக்கீரை பருப்புக் கூட்டு செய்யத் தேவையானபொருட்கள்:

அரைக் கீரை – 4 கப்

பாசிப் பருப்பு – 100 கிராம்

காயம் – சிறிது

சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 4

தக்காளி - 1 சிறியது

தாளிக்க:

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு – அரை டீஸ்பூன்

வெங்காயம் – பாதி

கறிவேப்பிலை – சிறிது

அரைக்கீரை பருப்புக் கூட்டு செய்முறை:

அரைக் கீரையை நன்றாக ஆய்ந்து சுத்தமாக கழுவி வைக்கவும். கழுவிய கீரையை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு, காயம், மஞ்சள் தூள் சேர்த்து முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பருப்பு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

அதே பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மசாலா வாடை போனதும் கீரையை சேர்த்து 2 நிமிடம் நன்றாக கிளறி விடவும்.

பிறகு வேக வைத்த பருப்பு, தேங்காய் விழுது எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். கூட்டு கெட்டியானதும் இறக்கி விடவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கீரையில் சேர்க்கவும்.

சுவையான கீரை பருப்புக்கூட்டு ரெடி!

சுடச்சுட சாதத்துடன் சுண்டைக்காய் குழம்பை ஊற்றி அரைக்கீரை கூட்டை சுவைத்து மகிழுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்