Homemade Bread: ஓவன் தேவையில்லை குக்கரிலேயே செய்யலாம் சாஃப்ட் பிரட்! இப்படி செஞ்சு பாருங்க!
Homemade Bread:வீட்டில் பிரட் வைத்து பல விதமான உணவுகளை நாமே செய்யலாம். ஆனால் இந்த பிரட்டை வெளி கடைகளில் வாங்கும் போது அதில் அதிகப்படியான ஈஸ்ட், வேறு விதமான கெமிக்கல் கலவைகள் சேர்ப்பதற்கு வாய்ப்ப உள்ளது.
சாண்ட்விச் முதல் பிரட் ஆம்ப்ளேட் வரை அனைத்தும் செய்வதற்கு பிரட் முதன்மையான பொருளாக இருந்த வருகிறது. மேலும் வீட்டில் பிரட் வைத்து பல விதமான உணவுகளை நாமே செய்யலாம். ஆனால் இந்த பிரட்டை வெளி கடைகளில் வாங்கும் போது அதில் அதிகப்படியான ஈஸ்ட், வேறு விதமான கெமிக்கல் கலவைகள் சேர்ப்பதற்கு வாய்ப்ப உள்ளது. இந்த பிரட்டை நமது குழந்தைகளுக்கும் கொடுப்பது வழக்கமாக உள்ளது. எனவே இதனை தவிர்க்க நாமே நமது வீட்டில் எளிமையான முறையில் மைதா, ஓவன் இல்லாமல் ரவையில் பிரட் செய்யலாம்.
இந்த பிரட்டை வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுக்கும் போது, மிகவும் பாதுகாப்பான ஒரு உணவுப் பொருளாக இருக்கும். இந்த ஈஸியான ரவா பிரட்டை செய்யும் எளிய வழிமுறைகளை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
- 3 கப் ரவை
- சிறிதளவு ஈஸ்ட்
- 200 கிராம் வெண்ணெய்
- 200 கிராம் சர்க்கரை
- மூன்று டம்ளர் அளவுள்ள சுடு தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் ரவை மற்றும் சர்க்கரையை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்தக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு ஈஸ்ட் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் அந்த கலவையில் வெண்ணெய் மற்றும் சுடு தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும். இந்த கலவையை நன்கு அழுத்தி பிசைய வேண்டும். குறைந்தது 30 நிமிடங்கள் வரை பிசைந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மாவு நன்றாக உப்பி வரும்.
பிசைந்த மாவை நீளமாக உருட்டி தேய்க்க வேண்டும். பின்னர் இந்த மாவை மெதுவாக சுருட்டி விட வேண்டும். இதனை பிரட் டின்னில் வைத்து மூடி வைக்க வேண்டும். இதனை 40 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். இது அந்த மாவு உப்புவாதற்கான நேரம் ஆகும். 40 நிமிடங்கள் கழித்து அதனை பார்க்கும் போது மாவு நன்றாக உப்பி வந்ததை பார்க்க முடியும். இப்போது இந்த டின்னை குக்கரினுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் வைக்க வேண்டும். குக்கர் மூடியில் விசில், கேஸ்கட் இல்லாமல் மூடி வைக்க வேண்டும். இதனை ஒரு 30 நிமிடங்கள் கழித்து எடுக்கும் போது மென்மையான பிரட் கிடைக்கும். இதனை பாலில் நனைத்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது மிகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். அனைவரும் சாப்பிடலாம்.
குறிப்பு
பிரட் நன்றாக உப்பி வருவதற்கு மாவை நன்றாக இடை விடாமல் பிசைந்து விட வேண்டும்.மேலும் சுடு தண்ணீரை சிறிது சிறிதாக மட்டுமே ஊற்றி கிளற வேண்டும், அப்போதுதான் அதிக தண்ணீர் சேர விடாமல் மாவை கலக்க முடியும். இதனை வீட்டில் செய்து தருவதால் முழுக்க பாதுகாப்பானதாக இருக்கும். குழந்தைகளுக்கும் இதனை கொடுக்கலாம் . சாண்ட்விச், பிரட் ஆம்பேலட் ஆகியவைகளை இந்த பிரட்டில் செய்து தரும் போது கூடுதல் சுவையாக இருக்கும். எனவே இதனை வீடுகளில் ட்ரை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள் .
டாபிக்ஸ்