Radish Paratha: சத்தான பிரேக்பாஸ்ட் முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி?
Radish Paratha: முள்ளங்கி போன்ற காய்கறிகளில் ஒருவித சுவையற்ற தன்மை இருக்கும். வீடுகளில் முள்ளங்கி சாம்பார் வைக்கும் போது கூட அதன் சுவையை சிலர் விரும்புவதில்லை.
முள்ளங்கி போன்ற காய்கறிகளில் ஒருவித சுவையற்ற தன்மை இருக்கும். வீடுகளில் முள்ளங்கி சாம்பார் வைக்கும் போது கூட அதன் சுவையை சிலர் விரும்புவதில்லை. ஏனெனில் முள்ளங்கியில் வரும் ஒரு வித மணம் பலருக்கு பிடிப்பதில்லை. எனவே இந்த முள்ளங்கியில் சுவையான பரோட்டா செய்யும் முறையை இங்கு காண்போம். இந்த சுவையான பரோட்டாவை காலை நேர உணவாக கொடுக்கும் போது அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவர். மேலும் இதில் இருக்கும் சத்துக்களும் உடலுக்கு சிறப்பான வலிமையத் தருகிறது.
தேவையான பொருட்கள்
2 கப் கோதுமை மாவு
1 கப் தயிர்
4 முள்ளங்கி
1 தக்காளி
1 உருளைக்கிழங்கு
3 பச்சை மிளகாய்
சிறிதளவு இஞ்சி
1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
சிறிதளவு மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் பெருங்காயம்
1 டீஸ்பூன் கரம் மசாலா
1 டீஸ்பூன் சாட் மசாலா
1 டீஸ்பூன் மாங்காய் தூள்
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். முள்ளங்கியை துருவி அதில் உப்பு சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அந்த முள்ளங்கியை ஒரு துணியில் போட்டு பிழிந்து தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். முள்ளங்கி சக்கையை தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். பின்னர் அதனை மசித்து எடுத்துக் கொள்ளவும்.
பரோட்டாவிற்கான மாவு
ஒரு பெரிய பாத்திரத்தில் 2 கப் அளவுள்ள கோதுமை மாவை போட்டு, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும். சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். மேலும் மாவுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்து மாவு ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை 15 முதல் 20 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், பெருங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் கடலை மாவு, கரம் மசாலா, மாங்காய் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூளை சேர்த்து கிளறவும். பின்னர் துருவிய முள்ளங்கி, மசித்த உருளைக்கிழங்கை போட்டு வேக விடவும். சிறிது நேரம் கழித்து நறுக்கிய கொத்தமல்லியை போட்டு அதை கிளறி விடவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் தயிர், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, ஷாட் மசாலா, தேவையான அளவு உப்பை போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். பின் அதில் மாவு மற்றும் மசாலா பொருட்களை போட்டு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு தோசை சட்டியில் தேய்த்து வைத்த மாவை போட்டு வேக விடவும். முள்ளங்கி பரோட்டா நன்கு வேகும் வரை புரட்டி போடவும். இந்த முள்ளங்கி பரோட்டா மிகவும் ருசியுடனும், முள்ளங்கியின் இயல்பு வாடை இல்லாமலும் இருக்கும். இதனை ருசித்து சாப்பிடலாம்.
டாபிக்ஸ்