Rabit Gravy: ‘கமகமனு காரசாரமா முயல் கறி சாப்பிடனுமா?’ ஈஸி செய்முறை இதோ!
கூடவே கருவேப்பிலை மற்றும் கொத்து மல்லியை சேர்த்து கிண்டினால், சுடச்சுட கமகம முயல் கறி ரெடி. டிபன், சாப்பாடு எல்லாவற்றிக்கும் சிறந்த உணவாக இருக்கும்.
அசைவ உணவுகளில் பல்வேறு சுவையான உணவுகள் உள்ளன. அந்த வரிசையில் பலருக்கு பிடித்த உணவு முயல் கறி. முயல் கறி சமைப்பது ஒரு விதமான கலை. காரணம், அதன் இறைச்சி கொஞ்சம் வாடை வரக்கூடியது. அதை சரியாக சுத்தம் செய்வது கட்டாயம். அதன் பின், முயல் கறியை செமி கிரேவியாக சமைப்பது தான் உத்தமம். அதிலும், கொஞ்சம் காரம் தூக்கலாக போட்டால் இறைச்சி வாடை உள்ளிட்டவை இல்லாமல் தவிர்க்க முடியும். சரி வாங்க, இப்போ சுவையான முயல் கறி சமைப்பதைப் பற்றி பார்க்கலாம்.
- சிறிதாக வெட்பட்ட முயல் கறியை நான்கு முறை கழுவிய பின், மூழ்கும் அளவிற்கு குக்கரில் வைத்து 3 விசில் வைக்க வேண்டும். சமையலுக்கு தேவையான உப்பில் பாதி அளவை வேக வைக்கும் போது போட்டுவிடவும். கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து அதன் பின் வேக விடவும்.
தேவையான பொருட்கள் இதோ:
- பெரிய வெங்காயம் சிறிதாக வெட்டியது ஒன்று
- ஒரு தாக்காளி நறுக்கியது
- வெட்டப்பட்ட ஒரு பச்சை மிளகாய்
- ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட்
- ஒரு ஸ்பூன் சோம்பு பொடி
- அரை ஸ்பூன் மிளகாய் தூள்
- 40 கிராம் குழம்பு மிளகாய் தூள்
- சிக்கன் மசாலா ஒரு ஸ்பூன்
- கரம், மசாலா ஒரு ஸ்பூன்
- கறிவேப்பிலை, கொத்து மல்லி
- 3 அன்னாசிப்பூ, பட்டை இலை,கிராம்பு, அரை ஸ்பூன் சோம்பு
இப்போது மூன்று விசில் வருவதற்குள், வதக்கும் பணிகளை தொடங்கவும். மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை இலலை, அன்னாசிப்பூ, சோம்பு, கிராம்பு உள்ளிட்டவற்றை அதில் போடவும். சிறிது நேரம் கழித்து வெங்காயம் போட்டு 3 நிமிடம் வதக்கவும், அதன் பின் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்டை அதில் போட்டு சேர்த்து வதக்கவும். அதையும் ஒரு 3 நிமிடம் வேக வைக்கவும். அடுப்பை குறைத்து வைத்து, அரை டீ ஸ்பூன் காய்ந்த மிளகாய் தூள், கரம் மசாலா, சிக்கல் மசாலா, குழம்பு மிளகாய் தூள் அனைத்தையும் சேர்து பேஸ்ட் போல வரும் படி வதக்க வேண்டும்.
அதன் பின் வெந்த முயல் கறியை எடுத்து அதனும் போடவும. மசாலா அதன் மீது படிவும் படி நன்கு கிண்டிவிடவும்.
லேசாக தண்ணீர் விட்டு, 20 நிமிடங்கள் வேகும் படி செய்யவும். ஏற்கனவே உப்பு போடப்பட்டிருப்பதால் அரை அளவு உப்பை சேர்க்கவும். நீர் அனைத்தும் வற்றி, செமி கிரேவியாக மாறியிருக்கும். கடைசியாக சோம்பு பொடியை அதனுடன் சேர்த்து, கூடவே கருவேப்பிலை மற்றும் கொத்து மல்லியை சேர்த்து கிண்டினால், சுடச்சுட கமகம முயல் கறி ரெடி. டிபன், சாப்பாடு எல்லாவற்றிக்கும் சிறந்த உணவாக இருக்கும்.
டாபிக்ஸ்