Herbal Diet: வயிற்றுநோவுகளுக்கு தீர்வு தரும் வெள்ளைப்பூண்டு லேகியம்!
வயிற்று நோவுகளுக்கு தீர்வு தரும் வெள்ளைப்பூண்டு லேகியம் செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
அஜீரணம், வயிறு உப்புசம், புளித்த ஏப்பம், வாய்வுத் தொல்லை போன்ற பல்வேறு வயிற்றுப் பிரச்னைகளுக்கும் பூண்டு சிறந்த நிவாரணியாகும். சித்த மருத்துவத்தில் இதுபற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. பிள்ளை பெற்றவர்கள் பூண்டு லேகியத்தை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகள் உண்டு.
இதில் வெள்ளைப்பூண்டு லேகியம் பல மருத்துவ நன்மைகளைத் தரக்கூடியது.
வெள்ளைப் பூண்டு லேகியம் வீட்டிலேயே செய்வது எப்படி என்பது குறித்து இங்கு காண்போம்.
பூண்டு லேகியம் செய்யத் தேவையானவை–
பூண்டு – 1 சுட்டு அரைத்தது
பனை வெல்லம் – நான்கு மேசைக்கரண்டி
பெருங்காயம் பொடி – அரைதேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி (சூடுபடுத்தி ஊற்றவும்)
பூண்டு லேகியம் செய்முறை –
முழு பூண்டை சுட்டு அதனை அரைத்து அதனுடன் சிறிதளவு பனை வெல்லத்தை, சூடுபடுத்திய நெய்யுடன் சேர்க்கவும்.
அதில் பெருங்காயப் பொடியை சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
இந்த உருண்டைகளை தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாத்திரை போடுவது போல் போட்டுக்கொண்டு பால் சேர்க்காத கட்டங்காபி குடிக்க வேண்டும்.
இந்த லேகியத்தை எடுத்துக் கொண்ட பிறகு ஒரு மணி நேரத்துக்கு வேறு ஒன்றுமே சாப்பிடக்கூடாது.
48 நாட்கள் ஒரு மண்டலத்திற்கு இதன்படி சாப்பிட்டு வரவேண்டும்.
அதன் பின் வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும்.
டாபிக்ஸ்