தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Pepper Dhaniya Rasam

உணவு செரிமானத்தைத் தூண்டும் மிளகு மல்லி ரசம் செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil
Mar 31, 2023 11:16 PM IST

Healthy Reciepe; உணவு செரிமானத்தைத் தூண்டும் மிளகு மல்லி ரசம் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்

 மிளகு மல்லி ரசம்
மிளகு மல்லி ரசம்

ட்ரெண்டிங் செய்திகள்

மிளகு மல்லி ரசம் செய்யத் தேவையான பொருட்கள்.:

மிளகு – 2 டீஸ்பூன்,

மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன்,

ரசப்பொடி – ஒரு டீஸ்பூன்,

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,

தக்காளி – ஒன்று,

புளி – சிறிதளவு,

வெல்லம் அல்லது சர்க்கரை – சிறிதளவு,

நெய் – ஒரு டீஸ்பூன்,

பூண்டுப் பல் – 2,

கடுகு – சிறிதளவு,

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,

கறிவேப்பிலை– சிறிதளவு,

கொத்த மல்லித்தழை – சிறிதளவு,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

மிளகு – மல்லி ரசம் செய்முறை.:

நெய்யில் மிளகு, தனியாவை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். புளியில் 2 கப் நீர் விட்டு புளிக்கரைசல் தயார் செய்யவும்.

கடாயில் புளிக்கரைசலை விட்டு உப்பு, பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டுப் பல், நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.

இப்போது மிளகு-தனியா பொடி, ரசப்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி, வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கவும்.

எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கொத்த மல்லித்தழை தூவி, ரசப் பாத்திரத்தை மூடவும்.

ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிய உடனேயே மூடி விட்டால் ரசத்தின் மணம், சுவை அப்படியே கிடைக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்