Banana Appam: சத்தான வாழைப்பழ அப்பம்.. இப்படி செஞ்சு பாருங்க!
ஹெல்தியான வாழைப்பழத்தில் அப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க
பொதுவாக வீடுகளில் ஸ்நாக்ஸ் செய்வது குறைந்து விட்டது. பாக்கெட்டுகளில் விற்கப்படும் தின்பண்டங்கள் தான் அதிகமாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் கொஞ்சம் முயற்சி எடுத்தால் வீட்டிலேயே ஹெல்த்தியான ஸ்நாக்ஸ்களை செய்த கொடுக்க முடியும் அந்த வகையில் ஹெல்தியான வாழைப்பழத்தில் அப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம்
வெல்லம்
கோதுமை மாவு
சோடா உப்பு
அரிசி மாவு
ஏலக்காய்
தேங்காய் பூ
செய்முறை
எண்ணெய்
செய்முறை
ஒரு பெரிய நேந்திரம் பழந்தை நன்றாக வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த பழத்தை தோல் நீக்கி நன்றாக மசித்து எடுத்து கொள்ள வேண்டும். பழம் கெட்டியாக இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
அதில் அரை கப் அளவு வெல்லத்தை துருவி பாகு காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். மேலும் அரைக்கப் கோதுமை மாவையும் சலித்து விட்டு சேர்த்து கொள்ள வேண்டும். இரண்டு ஸ்பூன் அரிசி மாவையும் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் கால் ஸ்பூன் ஏலக்காய் பவுடர், கால் ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதில் அரைக்கப் தேங்காய் துருவலையும் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும். எண்ணெய் நன்றாக சூடான பிறகு மாவை லேசா உற்றி விட வேண்டும். இரண்டு நிமிடம் வெந்த பிறகு அப்பத்தை பிரட்டி விட்டு வேக விடலாம். அவ்வளவு தான் நன்றாக வேக விட்டு எடுத்தால் பஞ்சு போல வாழைப்பழ அப்பம் ரெடி
உடனே செஞ்சு பாருங்க. உங்கள் குழந்தைகளுக்கு ஹெல்தியான ஸ்நாக்காக இது இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.