Bachelor Kitchen:ஈஸியாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bachelor Kitchen:ஈஸியாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி?

Bachelor Kitchen:ஈஸியாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி?

Marimuthu M HT Tamil
Aug 27, 2023 11:08 PM IST

எலுமிச்சை சாதத்தை எளிதில் செய்வது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இக்கட்டுரை.

எலுமிச்சை சாதம்
எலுமிச்சை சாதம்

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

கடுகு  - ஒரு டீஸ்பூன், 

கடலை பருப்பு - இரண்டு டீஸ்பூன், 

பச்சை மிளகாய் - 2, 

காய்ந்த மிளகாய் - 3, 

வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு,

கறிவேப்பிலை - சிறிதளவு, 

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,

எலுமிச்சை - 1

செய்முறை: ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு டீஸ்பூன் கடுகு, இரண்டு டீஸ்பூன் கடலை பருப்பு, 2 பச்சை மிளகாய், 3 காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை, சிறிதளவு கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும். நன்கு கடலை பருப்பு மொறுமொறுவென வந்தவுடன், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ஒரு அரை ஸ்பூன் உப்பு சேர்த்துக்கொள்ளவும். பின், எலுமிச்சை சாற்றினை அதில் பிழிந்துவிடவும். அதையடுத்து, ஒரு 3 நிமிடங்கள் கழித்து, அதனை இறக்கிக்கொள்ளவும். பின், தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த சாதத்தில் நன்கு கிளறிக்கொள்ளவும். பின் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயினை ஊற்றிக்கொள்ளவும்.

இப்போது கமகமக்கும் சுவையான எலுமிச்சை சாதம் தயார். 

இதையும் படிங்க: Monday Lunch Box: எளிமையான முறையில் சீரக சாதம் செய்வது எப்படி?

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.