Monday Lunch Box: எளிமையான முறையில் சீரக சாதம் செய்வது எப்படி?
எளிமையான முறையில் சீரக சாதத்தை செய்வது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது, இக்கட்டுரை
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை எப்போதுமே பரபரப்பாகவே துவங்கும். இந்நிலையில் திங்கட்கிழமை மதியத்துக்கு எளிமையான முறையில், சீரக சாதம் செய்வது எப்படி என்பது குறித்து காணலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்,
நெய் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
வாசனை இலை - 1,
பிரியாணி பட்டை - சிறிதளவு,
கிராம்பு - 5,
ஏலக்காய் - 6,
சீரகம் - 1 டீஸ்பூன் ஆகியவற்றைப் போட்டு நன்கு வறுக்கவும்.
செய்முறை: ஒரு கப் அரிசியை எடுத்து, ஒரு பவுலில் நீர் நிரப்பி நன்கு அலசிக் கொள்ளவும். அரைமணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் நெய் ஒரு டீஸ்பூன், எண்ணெய் ஒரு டீஸ்பூன், வாசனை இலை ஒன்று, பிரியாணி பட்டை சிறிதளவு, கிராம்பு - 5, ஏலக்காய் - 6, சீரகம் - 1 டீஸ்பூன் ஆகியவை சேர்த்து, நன்கு வறுக்கவும். பின், அலசி எடுத்த ஒரு கப் அரிசியை வாணலியில் போட்டு, நன்கு கிளறவும். இரண்டு நிமிடங்கள் கழித்து இரண்டு கப் நீர் சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் உப்பு நன்கு கலக்கவும்.
பின், அவற்றை அதிக வெப்பநிலையில் வைத்து கொதிக்கவிடவும். அதன்பின், சிறிதளவு நீர், தயாராகி வரும் சீரக சாதத்தின்மேல் வந்ததும் மூடியை வைத்து மூடிவிடவும். பின் 5 நிமிடங்கள் கழித்து திறக்கவும். அதனையடுத்து, அதனைக் கிளறவும்.
இப்போது மணமணக்கும் சீரக சாதம் தயார். இதனை திங்கட்கிழமை லஞ்ச் பாக்ஸ்-க்கு அரைமணி நேரத்தில் எளிமையாக தயாரித்து கொண்டுசெல்லலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்