தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Green Chilli Gravy

Tasty Recipe: ருசியான பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil
Mar 25, 2023 11:01 PM IST

ருசியான பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி? என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

ருசியான பச்சை மிளகாய் குழம்பு
ருசியான பச்சை மிளகாய் குழம்பு

ட்ரெண்டிங் செய்திகள்

பச்சை மிளகாய் குழம்பு பெரும்பாலும் புளித்தண்ணீர், சில காய்கறிகளுடன் சேர்த்து செய்யப்படுகிறது. விருப்பப்பட்டால் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. பச்சை மிளகாய் குழம்பு செய்முறை குறித்து இங்கு பார்க்கலாம்

சுவையான மிளகாய் குழம்பு செய்யத் தேவையானவை :

பச்சை மிளகாய் - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 200 கிராம்

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

புளி - 1 எலுமிச்சை அளவு

கடுகு - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 100 மில்லி லிட்டர்

சுவையான மிளகாய் குழம்பு செய்முறை :

மிளகாயை வட்ட வடிவமாக, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

நன்றாக வதங்கிய பின், புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் போட்டுக் கிளறவும்.

மிதமான தீயில் வைத்து குழம்பு கெட்டியானதும் இறக்கி, பரிமாறவும். ஊறுகாய் போல் பயன்படுத்துவதற்கு ஏற்றது.

விருப்பப்பட்டவர்கள் சிறிது கடலை பருப்பு, 1 தக்காளி, 1 கத்தரிக்காய் சேர்த்து சமைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்