தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dates Payasam: சத்துக்கள் நிறைந்த பேரீச்சைப்பழம்-ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி?

Dates Payasam: சத்துக்கள் நிறைந்த பேரீச்சைப்பழம்-ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி?

Manigandan K T HT Tamil
Aug 09, 2023 11:30 AM IST

புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. நுண்ணுயிர் தொற்றுகளைத் தடுக்கிறது. நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

ஆப்பிள், பேரீச்சைப்பழ பாயாசம்
ஆப்பிள், பேரீச்சைப்பழ பாயாசம் (Freepik)

ட்ரெண்டிங் செய்திகள்

புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. நுண்ணுயிர் தொற்றுகளைத் தடுக்கிறது. நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. இதனை தினமும் சாப்பிடுவது நல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவந்தால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

இப்படி சத்துகள் நிறைந்த பேரீச்சம் பழம், ஆப்பிள் கொண்டு பாயாசம் செய்வது எப்படி என பார்ப்போம்.

அதற்கு தேவையான பொருட்கள்

ஆப்பிள் - 1 துருவியது

பால் - 1 லிட்டர் காய்ச்சி ஆறவைத்தது

வறுத்த சேமியா - 3 தேக்கரண்டி

பேரீட்சைப்பழம் நறுக்கியது

முந்திரி பருப்பு

திராட்சை

சர்க்கரை - 3 மேசைக்கரண்டி

ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி

ரோஸ் எசன்ஸ் - 2 சொட்டு

நெய்

செய்முறை

ஒரு பானில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, நறுக்கிய பேரீட்சைப்பழம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து கொள்ளவும். அடுத்து ஆப்பிளின் தோலை நீக்கி துருவி கொள்ளவும். ஒரு பானில் நெய் ஊற்றி துருவிய ஆப்பிளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்பு சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.

ஒரு பானில் காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி, வறுத்த சேமியாவை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர், சர்க்கரை, ஏலக்காய் தூள், வேகவைத்த ஆப்பிள் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும். 2 நிமிடம் லோ ஃபிளேமில் வைத்து கலந்து விடவும். பிறகு ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவும். இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை, பேரீச்சைப்பழம் சேர்த்து கலந்து விட்டு 2 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

சுவையான பேரீச்சைப்பழம் ஆப்பிள் பாயாசம் தயார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்