தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beetroot Poriyal: 25 நிமிடத்தில் சத்தான பீட்ரூட் பொரியல் செய்யலாமா?

Beetroot Poriyal: 25 நிமிடத்தில் சத்தான பீட்ரூட் பொரியல் செய்யலாமா?

Aarthi V HT Tamil
Sep 13, 2023 12:43 PM IST

பீட்ரூட் பொரியல் எப்படி செய்வது என பார்க்கலாம்.

பீட்ரூட் பொரியல்
பீட்ரூட் பொரியல்

ட்ரெண்டிங் செய்திகள்

பீட்ரூட் - 2 கப்

பச்சை மிளகாய் - 3

கடுகு - 1 ஸ்பூன்

வெங்காயம் - 1

தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - தேவையான அளவு

தயாரிக்கும் முறை:

பீட்ரூட்டை முதலில் தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். முடிந்தவரை மெல்லியதாக தடியாக கட் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை எடுத்து முதலில் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காத்திருக்கவும். நன்கு காய்ந்த பிறகு அதில் கடுகு போட்டு வெடிக்க விடவும்.

இப்போது மிளகாய், கறிவேப்பிலை , பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயத் துண்டுகளைச் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

உடனே பீட் ரூட்டை அதில் போட்டு நன்கு கலக்கவும். ஒரு நிமிடம் கழித்து உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்க்கவும்.

இப்போது மூடி வைத்து தண்ணீர் உறிஞ்சும் வரை 5 நிமிடம் கொதிக்க விடவும். இடையில் கலந்து மூடி வைக்கவும். வதங்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.

இப்போது தேவைப்பட்டால் அதில் துருவிய தேங்காய் சேர்க்கலாம். 2 நிமிடம் வேகவைத்து வடிகட்டவும்.

இந்த பொரியலை சூடான சம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்