பேக்கரிக்கு போக வேண்டியதில்லை! வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் பப்ஸ்! பக்கா ரெசிபி உள்ளே!
பேக்கரி உணவுகளில் அதிக பேரால் விரும்பும் பண்டங்களில் முக்கியமனதாக சிக்கன் பப்ஸ் இருந்து வருகிறது. இதன் க்ரிஸ்பி தன்மைக்காக அனைவராலும் விரும்பப்படுகிறது.
பேக்கரி உணவுகளில் அதிக பேரால் விரும்பும் பண்டங்களில் முக்கியமனதாக சிக்கன் பப்ஸ் இருந்து வருகிறது. இதன் க்ரிஸ்பி தன்மைக்காக அனைவராலும் விரும்பப்படுகிறது. பேக்கரிகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை செய்வது சற்று கடினமாக இருக்கலாம். ஏனெனில் அங்கு உள்ள உணவு சமைக்கும் வசதிகள் வீடுகளில் இருப்பதிலலை. சில சமயங்களில் வீடுகளில் ஓவன் வைத்திருப்பவர்களும் சரியான பதத்தில் செய்யத் தெரியாமல் இருப்பனர். வீட்டிலேயே சிக்கன் பப்ஸ் செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
சிக்கன் துண்டுகள்
2 கப் மைதா மாவு
அரை கப் வெண்ணெய்
1 பெரிய வெங்காயம்
1 தக்காளி
1 பச்சை மிளகாய்
அரை கப் பச்சை பட்டாணி
3 பூண்டு பல்
சிறிதளவு இஞ்சி
சிறிதளவு கடுகு
அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்
அரை டேபிள்ஸ்பூன் சீரக தூள்
அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
சிறிதளவு கறிவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலக்கவும். அதில் தண்ணீர் சேர்த்து பிசையவும். இந்த மாவை இரண்டாக பிரித்துக் கொள்ளவும். இதன் முதல் பாதியை வைத்து அதில் எண்ணெய், வெண்ணெய் ஆகியவற்றை தேய்த்துக் கொள்ளவும். அதன் மேலே இரண்டாவது பாதியை வைத்து மேலிருந்து ஒரு மடி கீழே இருந்து ஒரு மடியாக மடித்து மீண்டும் அதன் மேலே சிறிதளவு வெண்ணெய் தடவி சிறிது மைதா மாவை தூவி இடது புறத்திலிருந்து ஒரு மடி மற்றும் வலது புறத்தில் இருந்து ஒரு மடி மடிக்கவும். இந்த மாவை ஒரு கவரில் போட்டு 40 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின் மீண்டும் அதை எடுத்து வெண்ணெய் தடவி தேய்த்து மறுபடியும் ஒரு 40 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பின்பு இந்த மாவை எடுத்து பப்ஸ் செய்வதற்கு ஏற்றவாறு தடிமனாக தேய்த்து எடுத்தக் கொள்ளவும். இதன் ஒழுங்கற்ற ஓரங்களை வெட்டி விடவும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்த மிதமான சூட்டில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதில் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்த வதக்கவும். மேலும் அதில் மஞ்சள் தூள், சீரக தூள், கரம் மசாலா, மிளகாய் தூளை சேர்த்து வதக்கவும். இது வதங்கிய பின் தக்காளி, பட்டாணி மற்றும் தண்ணீர் ஊற்றி வேக விடவும். இவை வெந்ததும் அதில் சிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கன், தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும். பின் இதனை இறக்கி மேலே கொத்தமல்லியை நறுக்கி தூவவும். இது ஆறியவுடன் பப்ஸ் மாவின் நடுவில் வைத்து ஓரங்களை மடித்து வைக்கவும். இதனை ஓவனில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை 400 டிகிரி வெப்பத்தில் வேக விடவும். வெந்ததும் சூடான மற்றும் மொறு மொறுப்பான சிக்கன் பப்ஸ் தயார். இதனை நீங்களும் உங்கள் வீடுகளில் செய்து அசத்துங்கள்.
டாபிக்ஸ்