Eggless Chocolate cookies: முட்டை இல்லாமல் சாக்லேட் குக்கீஸ்! கிட்ஸ்களுக்கான பக்கா ரெஸிபி!
Eggless Chocolate cookies: உலகில் சாக்லேட் விரும்பாத குழந்தைகளே இல்லை எனக் கூறலாம். அந்த அளவிற்கு சாக்லேட் மீதி அலாதியான விருப்பம் இருந்து வருகிறது.
உலகில் சாக்லேட் விரும்பாத குழந்தைகளே இல்லை எனக் கூறலாம். அந்த அளவிற்கு சாக்லேட் மீது அலாதியான விருப்பம் இருந்து வருகிறது. இந்த சாக்லேட்டில் செய்து கொடுக்கும் அனைத்து உணவையும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அதன் அடிப்படையில் சாக்கோ சிப் குக்கீஸ் அவர்களது பேவரைட் ஆகத்தான் இருக்கும். குட்டீஸ் விரும்பும் வகையில் சுவையான சாக்லேட் சிப் குக்கீஸை வீட்டிலேயே எளிமையாக செய்யும் முறையை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் மைதா மாவு
அரை கப் நாட்டு சர்க்கரை
2 டீஸ்பூன் சோள மாவு
தேவையான அளவு சாக்லேட் சிப்ஸ்
250 கிராம் சர்க்கரை
அரை கப் வெண்ணெய்
அரை கப் பால்
1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
சிறிதளவு பேக்கிங் சோடா
தேவையான அளவு உப்பு
பட்டர் பேப்பர்
செய்முறை
முதலில் பாலை காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, சிறிதளவு உப்பு, பேக்கிங் சோடா ஆகியவற்றை சல்லடையின் மூலம் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சலிப்பதன் மூலம் அதில் உள்ள சிறு சிறு கட்டிகள் நீக்கப்படும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். க்ரீம் பதத்தில் இதனை கலக்க வேண்டும்
பின்பு அதில் வெண்ணிலா எசன்ஸ், பாதி அளவு சாக்லேட் சிப்ஸ், மற்றும் சலித்து வைத்திருக்கும் மாவு கலவையில் பாதியை சேர்த்து அதை பக்குவமாக சாக்லேட் சிப்ஸ்கள் உடைந்து விடாதவாறு நன்கு கிளறி விடவும். காய வைத்து ஆற வைத்திருக்கும் பாலில் பாதியை இதில் சேர்த்து அதை பக்குவமாக நன்கு கிளறி விடவும். அடுத்து மீதமுள்ள மாவு கலவையை முழுமையாக சேர்த்து அதனுடன் மீதமுள்ள சாக்லேட் சிப்ஸ்களில் பாதியை சேர்த்து பக்குவமாக நன்கு கலந்து விடவும். பின்பு மீதமுள்ள பாலையும் ஊற்றி அதை நன்கு கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு வரும் வரை பிசைந்து கொள்ளவும்.
சப்பாத்தி மாவு பதம் வந்ததும் அதை அப்படியே எடுத்து சுமார் அரை மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும். இப்பொழுது ஓவன் டிரேவை எடுத்து அதில் பட்டர் பேப்பர்களை விரித்து வைக்கவும். 30 நிமிடத்திற்க்குப் பிறகு ஃப்ரிட்ஜில் இருக்கும் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி டிரேயில் விரித்து வைத்த பட்டர் பேப்பரின் மீது வைக்கவும். அடுத்து அந்த கலவைகளை பிஸ்கட் வடிவிற்கு தட்டி அதன் மேலே மீதம் உள்ள சாக்லேட் சிப்ஸ்களை வைக்கவும். பின்பு ஓவனை சுமார் 15 நிமிடம் வரை 180 டிகிரி செல்சியஸில் சுட வைக்கவும். 15 நிமிடத்திற்க்கு பிறகு இந்த டிரேவை ஓவனில் வைத்து அதை சுமார் 20 நிமிடம் வரை 180 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும். 20 நிமிடத்திற்க்குப் பிறகு டிரேவை ஓவனிலிருந்து எடுத்து சற்று நேரம் ஆறவிட்டு இந்த எக்க்லேஸ் சாக்லேட் சிப் குக்கீஸ்ஸை வீட்டில் இருக்கும் உங்கள் குட்டீஸோடு சுவைத்து மகிழுங்கள்.
டாபிக்ஸ்