தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Drumstick Leaves Chutney : முருங்கைக் கீரையில் சட்னியா? 10 இட்லி கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க! இதோ ரெசிபி!

Drumstick Leaves Chutney : முருங்கைக் கீரையில் சட்னியா? 10 இட்லி கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
May 14, 2024 06:25 PM IST

Drumstick Leaves Chutney : முருங்கைக் கீரையில் சட்னி செய்ய முடியுமா? இதோ எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Drumstick Leaves Chutney : முருங்கைக் கீரையில் சட்னியா? 10 இட்லி கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க! இதோ ரெசிபி!
Drumstick Leaves Chutney : முருங்கைக் கீரையில் சட்னியா? 10 இட்லி கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க! இதோ ரெசிபி! (one teaspoon of life)

ட்ரெண்டிங் செய்திகள்

வரமல்லி – ஒரு ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

பொட்டுக்கடலை – 5 பல்

பூண்டு – 5 பல்

எண்ணெய் – 2 ஸ்பூன்

முருங்கைக்கீரை – 2 கப் (ஆய்ந்து அலசிக்கொள்ளவேண்டும்)

பச்சை மிளகாய் – 2 (உங்கள் காரத்துக்கு ஏற்ப அதிகரித்துக்கொள்ளலாம்)

தேங்காய் துருவல் – ஒரு கப்

புளி – 2 கொட்டை

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

குண்டு மிளகாய் – 2 (முழுதாக)

செய்முறை

ஒரு கடாயில், முதலில் கடலைப்பருப்பு, வரமல்லி மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் ட்ரையாக வறுக்கவேண்டும்.

அது வறுபட்டவுடன், பொட்டுக்கடலை, பூண்டு பல் ஆகிய அனைத்தையும் சேர்த்து ஒன்றாக வறுக்கவேண்டும்.

வறுத்த அனைத்தையும் எடுத்து தனியாக வைத்துவிட்டு, ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, முருங்கைக்கீரையை வதக்கவேண்டும்.

அனைத்தையும் ஆறவைத்து, மிக்ஸி ஜாரில், வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய், வதக்கிய முருங்கைக்கீரை மற்றும் புளி, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் தாளிப்பு கரண்டியில் எஞ்சிய ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, முழு குண்டு மிளகாய் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்க்கவேண்டும்.

சுவையான முருங்கைக்கீரை சட்னி தயார். இதை மட்டும் தொட்டுக்கொள்ள கொடுத்தால், உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் 10 இட்லி வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்.

மேலும் முருங்கைக்கீரை என்றாலே பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

முருங்க்கீரையின் நன்மைகள்

முருங்கைக் கீரை மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு கீரை.இதில் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக இரும்புச்சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் அதிகமாக உள்ளன. முருங்கையின் கீரை மட்டுமல்லாமல் அதன் பூவையும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.

அதுமட்டுமல்ல எலும்புகளும், பற்களும் வலிமை பெற உதவும். கண் கோளாறுகள், பித்தம் தொடர்பான நோய்களில் இருந்து நிவாரணம் பெற்றுத் தரக்கூடியது முருங்கைக்கீரை. அதேபோல் முருங்கையின் ஈர்க்கும்கூட மருத்துவ குணம் நிறைந்தது.

வாரத்தில் ஒருநாள் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு நலக்குறைபாடுகள் தீரும். முக்கியமாக வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. பொரியல், கூட்டு மட்டுமல்லாமல் சூப் செய்தும் சாப்பிடலாம்.

அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தால் சாதாரண தலைவலியில் தொடங்கி இருமல், சளித்தொல்லைகளில் இருந்து விடுபடலாம். காரணம் இந்தக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. உடல் வலி ஏற்பட்டால் முருங்கைக்கீரையில் ரசம் அல்லது சூப் வைத்துக் குடித்து வந்தாலே நிவாரணம் கிடைக்கும்.

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. முக்கியமாக தாய்ப்பால் ஊறுவதற்கு முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தாலே போதும். 

குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்க முருங்கைக்கீரை சமைத்துச் சாப்பிட வேண்டியது அவசியம். மேலும் முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் தாய்மாருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் நன்மை கிடைக்கும்.

வாயுவை உண்டாக்கக்கூடிய உணவுகளை தாய்மார் சாப்பிட்டால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. முக்கியமாக குழந்தைகளின் வயிறு கல் போன்று வீங்கி உப்பிக்கொண்டு மிகுந்த தொல்லையை கொடுக்கும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தும். இது போன்ற நேரங்களில் முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிடுவது பலன் தரும்.

WhatsApp channel

டாபிக்ஸ்